Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் சூரிக்கு ஹீரோவாக குவியும் பட வாய்ப்புகள்..!

நடிகர் சூரிக்கு ஹீரோவாக குவியும் பட வாய்ப்புகள்..!

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த விடுதலை வருகின்ற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது .  இந்த திரைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தி இல் நடித்திருக்க நகைச்சுவை நடிகர் சூரி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே நடிகர் சூரிக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம் ஆகும். தற்பொழுது இருக்கும் நிலைத்து இந்த திரைப்படம் நடிகர் சூரிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் இவர் நடித்த பிறகு இந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்கு இவர் மிகவும் பொருத்தமாக இருக்கிறார் நல்ல பெயர் இவருக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் இன்னும் இவருக்கு நிறைய வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதுவரை எத்தனையோ திரைப்படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நகைச்சுவை நடிகனாக நடித்திருக்கிறார் நடிகர் சூரி. ஆனால் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ் கே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் கூட்டுக்காலி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் நடிகர் சூரி.

- Advertisement -

இதைத்தொடர்ந்து  இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சூரி ஒரு திரைப்படம் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை அருண் விஷ்வா இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட்டாசு, காக்கி சட்டை, போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் துறை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி ஒரு திரைப்படம் நடிக்க இருக்கிறார்.

இப்படி பல திரைப்படங்கள் வாய்ப்பு நடிகர் சூரிக்கு குவிந்த வண்ணம் இருக்கிறது. இது எல்லாம் இவர் திறமைக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஆகும். இவர் நடித்த அந்த விடுதலை திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் அவர் மிக அழகாக நடித்திருக்கிறார் என்பதற்காக இவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் ஆகும். இதை அவர் நல்ல முறையில் பயன்படுத்தி மென்மேலும் வளர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.இவர் நகைச்சுவை நடிகனாக இருந்தாலும் இவருக்கு என்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular