தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூரி. இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே அதாவது காதலுக்கு மரியாதை, மறுமலர்ச்சி,சங்கமும் போன்ற திரைப்படங்களில் எல்லாம் கூட்டத்தில் ஒருவராக நடனம் ஆடுபவர்களில் ஒருவராக இன்று அடையாளம் இல்லாத ஒரு மனிதனாக நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
பிறகு ஓரளவு முகம் பார்த்து நினைக்கக் கூடிய அளவிற்கு ஜெயம் ரவி நடித்த தீபாவளி திரைப்படத்தில் நடித்திருந்தார் சூரி. ஆனால் இவரை ஒரு தனித்துவம் வாய்ந்த நடிகனாக அறிமுகப்படுத்தியது வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படம் தான்.
அந்த திரைப்படத்தில் நூறு பரோட்டாக்களை உண்ண வேண்டும் என்ற பந்தயத்தில் அவர் ஏறத்தாழ 100 பரோட்டாக்களை சாப்பிட்டது போன்ற ஒரு காட்சி அவரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது. காரணமாக இவருக்கு பரோட்டா சூரி என்றும் ஒரு பெயர் உள்ளது.
அந்தத் திரைப்படம் நடிகர் சூரியின் வாழ்வில் ஒரு திருப்புமுனை என்று கூட கூறலாம். இதற்குப் பிறகு இவருக்கு நிறைய வாய்ப்புகள் திரைப்படங்களில் வந்தது. அதிலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் இவருடைய நகைச்சுவைக்காகவே பார்க்க ஆர்வத்தை தூண்டியது.
இவ்வாறு நகைச்சுவை நடிகனாக நடித்துக் கொண்டிருந்த சூரி தற்பொழுது வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்திருந்தார். இந்த திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வெற்றி அடைந்தது. முற்றிலும் புதுமையான கதாபாத்திரத்தில் நடிகர் சூரி ரசிகர்கள் மனதை வென்று இருக்கிறார்.
நடிப்பில் மட்டுமல்ல நடிகர் சூரி நிஜ வாழ்விலும் மக்களால் கொண்டாட கூடியவர் தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் மதுரையில் தன்னுடைய ரசிகர் ஆன மகேந்திரன் என்பவருடைய தாய் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட சூரி நேரில் சென்று தன் ரசிகனின் தாயை சந்தித்திருக்கிறார்.
அவ்வாறு சந்திப்பதற்காக செல்லும்பொழுது அவர் மிகவும் எளிமையாக ஆட்டோவில் சென்று இருக்கிறார். இதுவே மக்கள் மத்தியில் இவர் மீது ஒரு மரியாதை ஏற்பட்டிருக்கிறது. மேலும் என்னுடைய ரசிகர்கள் என் பெயரை வைத்து நிறைய நன்மைகளை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட என் ரசிகர்களினுடைய தாய் என் தாயாக நினைத்துப் பார்ப்பது தான் எனக்கு பெருமை என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார் நடிகர் சூரி.