Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாசிம்புவை வீழ்த்திய சூரி..! வசூலில் முதலிடம் பிடித்த விடுதலை.. முழு விவரம்

சிம்புவை வீழ்த்திய சூரி..! வசூலில் முதலிடம் பிடித்த விடுதலை.. முழு விவரம்

- Advertisement -

கடந்த மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படமும் 31ஆம் தேதி விடுதலை திரைப்படமும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இதில் இரண்டு படத்திற்குமே பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்துள்ளது. எனினும் தற்போது பத்து தல திரைப்படத்தை விட விடுதலை திரைப்படத்திற்கு மக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, திருச்சி, கோவை, உள்ளிட்ட ஏ சென்டர்களில் பத்து தல திரைப்படத்தை விட விடுதலை படத்தை காணவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முதல் காரணம் இயக்குனர் வெற்றிமாறன் படைப்பு என்பதால் இது ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

இதனால் முதல் நாளை விட இரண்டாவது நாள் வசூல் இரண்டாவது நாளை விட மூன்றாவது நாள் வசூல் அதிகரித்திருக்கிறது. இதேபோன்று திங்கள் மற்றும் செவ்வாய் என வர தொடக்க நாட்களிலும் விடுதலை திரைப்படத்திற்கு மக்கள் அதிக அளவு திரையரங்குகளில் செல்கிறார்கள்.

- Advertisement -

பத்து தல திரைப்படத்திற்கும் மக்கள் வந்தாலும் தற்போது வசூலில் விடுதலை திரைப்படமே முதலிடத்தில் இருக்கிறது. பத்து தல திரைப்படம் ஒரு வாரம் முன்பே வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வந்திருப்பதால் பத்து தல திரைப்படத்தின் வசூல் பெருமளவு பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பத்து தல திரைப்படம் வெந்து தணிந்தது காடு பெற்ற வசூலை கூட தொடர் வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மாறாக விடுதலை திரைப்படம் தற்போது வரை 17 கோடி ரூபாய் தமிழகத்தில் வசூல் படைத்து இருக்கிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை பெரிய படங்கள் எதுவும் வராததால் இரண்டுக்குமே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும்.

Most Popular