சென்னையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை மூலம் நடிகர் சூர்யா சூர்யா மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார்.
சூர்யா, விஜய் போன்ற நடிகர்கள் எல்லாம் சினிமாவில் சம்பாதித்ததை மாணவர்களின் கல்விக்காக செலவிட்டு வருகிறார்கள். குறிப்பாக நடிகர் சூர்யா இந்த அறக்கட்டளை மூலம் ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொடுத்திருக்கிறார்.
இன்று பலர் மருத்துவர் பொறியாளர் என பல நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். இந்த பணியை சூரியா ஆண்டு தோறும் செய்து வருகிறார்.இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் நடைபெற்றது .
இதில் பேசிய நடிகர் சூர்யா கல்வியின் மூலம் வாழ்க்கையும், வாழ்க்கை மூலம் கல்வியும் படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கு வந்திருக்கும் ஆசிரியர்களுக்கு தான் தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ள சூர்யா மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்று தமக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கல்விக்காக உதவிகள் வழங்குவதன் மூலம் தான் தமது வாழ்க்கையை நிறைவாக இருப்பதாக சூர்யா குறிப்பிட்டார். மேலும் மாணவர்களுக்கு சூர்யா சில அறிவுரைகளை வழங்கினார். காலையில் விரைவாக எழுந்து நமது வேலையை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட சூர்யா அதனை தற்போது தான் நாம் கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் பிறரை தவறாக பேசுவது நெகட்டிவாக பேசுவது ஆகியவற்றை அனைவரும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சூர்யா அறிவுரை வழங்கி உள்ளார்.மேலும் ஜாதி மதங்களை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை வழங்கி இருக்கிறார்.
நம்மைப் பற்றி வீண் பழிச்சொல் பேசி விட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்காமல் நமது பங்கு நாம் சிறப்பாக செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் சூர்யா அறிவுரை வழங்கி இருக்கிறார்.