வெற்றிமாறனின் இயக்கத்தில் தங்களது விருப்பமான நடிகரைக் காண வேண்டும் என பல்வேறு தரப்பு ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். அண்மையில் கூட விஜய் ரசிகர்கள் வெற்றிமாறனின் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படம் அமைய வேண்டுமென சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகினர்.
தமிழ் சினிமாவில் இதுவரை வெற்றிமாறனின் குறி மிஸ் ஆனதே கிடையாது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என அனைத்துமே பிளாக்பஸ்ட்டர். இதில் சில தேசிய விருதுகளும் அடங்கும்.
விடுதலை பாகம் – 1 முடிவுக்கு பிறகு இரண்டாம் பாகதின் பணியில் வெற்றிமாறன் தீவிரமாக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பே அவர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் எனும் படத்தைச் செய்ய ஒப்புக் கொண்டார்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு 2020ல் வாடிவாசல் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியானது. நடுவில் டெஸ்ட் ஷூட்டிங் கூட நடந்தது, ஆனால் ஷூட்டிங் துவங்கவே இல்லை. வெற்றிமாறன் முழுக்க முழுக்க விடுதலை படத்தில் தான் ஈடுபட்டு இருந்தார்.
இடையில் இப்படம் கைவிடப்பட்டது என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆனால் எதையுமே தயாரிப்பாளர் கலைப்புலி தானு தெரிவிக்கவில்லை. விடுதலை பாகம் – 2 இந்த ஆண்டு வெளியாகிய பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் படத்தைத் துவங்க வாய்ப்புள்ளது. அப்படித் துவங்கினால் ஒரு சின்ன டுவிஸ்ட் நிச்சயம் இருக்கும்.
சூர்யாவுக்கு பதிலாக நடிகர் தனுஷ் அதில் இடம்பெறுவர் என தகுந்த வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. மிகவும் காலம் கடந்துப் போனது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வெற்றிமாறன் மிகவும் நுட்பமான இயக்குனர். ஒரு சீன் சரியாக வர வேண்டுமென்பதற்காக 100 டேக்குகள் கூட செல்லத் தயங்காதவர்.
இச்செய்தி நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். இயக்கத்தில் தனுஷ் இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளார். நான்குமே சூப்பர் ஹிட். தற்போது இதனுடன் மற்றொரு படமும் இணையும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.