சினிமா

தமிழ்நாட்டை விட்டு செல்லும் சூர்யா.. குடும்பத்திற்காக ரசிகர்களை பிரிந்தார்

தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகனாக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. வெறும் நடிப்பை மட்டும் மேற்கொள்ளாமல் தயாரிப்பாளர், சமூக செயல்பாட்டாளர் என பல்வேறு முகங்களை சூர்யா கொண்டுள்ளார். சூர்யா தற்போது சென்னை தி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தை விட்டு மும்பைக்கு குடியேற உள்ளார்.

Advertisement

தன்னுடைய மகள் தியாவுக்காக இந்த பணியை சூர்யா செய்ய உள்ளார். தியா மும்பையில் பிரபல கல்வி நிறுவனம் ஒன்றில் பயில உள்ளார். இதனால் குடும்பத்துடன் அங்கு செட்டிலாக சூர்யா முடிவு எடுத்துள்ளார். இதற்காக 70 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் 9000 சதுர அடி அளவில் ஒரு வீட்டை சூர்யா வாங்கி இருக்கிறார்.

இதேபோன்று மும்பையில் இன்னொரு இடத்திலும் சூர்யா ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். இதைத்தவிர மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் டெண்டர் ஒன்றையும் சூர்யா எடுத்திருக்கிறார். இதேபோன்று மும்பையில் பல்வேறு இடங்களில் தொழில் செய்வதற்காக பல்வேறு முதலீடுகளை சூர்யா செய்து வருகிறார்.

Advertisement

ஏற்கனவே பாலிவுட் சில படங்களை சூர்யா தயாரித்து வருகிறார். இதன் காரணமாக இனி தமிழகத்தை விட்டு சூர்யா மும்பையில் குடியேறி அங்கேயே தனது வாழ்க்கையை கழிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையில் இருந்தவாறு படப்பிடிப்பில் நடிப்பது, கதைகள் கேட்பது என பல்வேறு பணிகளை சூர்யா செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

இதனால் சூர்யாவை இனி தமிழகத்தில் நாம் பார்ப்பது அரிதாகிவிடும். இந்த செய்தியை கேட்டவுடன் சூர்யா ரசிகர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். மகளின் படிப்பிற்காக சூர்யா இந்த முடிவு எடுத்தாலும் அங்கேயே தங்கும் அளவுக்கு தற்போது நடவடிக்கைகளை சூர்யா செய்து வருகிறார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top