Wednesday, November 20, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் பிரசாந்த் வாழ்வில் நடந்தது இதுதான் மனம் திறந்து பேசினார் அவருடைய தந்தை நடிகர் தியாகராஜன்

நடிகர் பிரசாந்த் வாழ்வில் நடந்தது இதுதான் மனம் திறந்து பேசினார் அவருடைய தந்தை நடிகர் தியாகராஜன்

90களில் ஃபேவரிட் ஹீரோக்கள் லிஸ்டில் நடிகர் பிரசாந்தும் இடம் பிடித்தவர். இவர் ரசிகர்களால் ஆணழகன் என்று கொண்டாடப்பட்டார். அது அவர் ஆணழகன் என்ற திரைப்படத்தில் நடித்ததால் மட்டுமல்லாமல அவருடைய வசீகரத் தோற்றத்தால் அப்படி ஒரு பெயர் அவருக்கு கிடைத்தது.

- Advertisement -

இவர் நடித்த ஜீன்ஸ், ஜோடி ,பார்த்தேன் ரசித்தேன் ,விரும்புகிறேன், மஜ்னு
போன்ற திரைப்படங்கள் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது வளர்ந்து வரும் காலகட்டத்தில் இப்படியான வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களை குவித்தார் நடிகர் பிரசாந்த்.

இவருக்கு இருந்த ரசிகர்களின் கூட்டத்தால் இவர் விஜய் ,அஜித் போன்று இன்றும் முன்னிலையில் இருக்கும் நடிகராக இருந்திருக்க வேண்டும் ஆனால் இவருடைய சொந்த வாழ்க்கையாலும் ஒரு சில விஷயங்களாலும் இவர் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார்.

- Advertisement -

மீண்டும் சினிமாவில் அண்ணன், நண்பன் போன்று துணை நடிகர்களாக ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகர் பிரசாந்த் .தற்பொழுது கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் நடிகர் பிரசாந்த் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இவருடைய தந்தை தியாகராஜன் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் தன் மகன் பிரசாந்தை தந்தை தியாகராஜரே பேட்டி எடுத்தார் . அப்போது நடிகர் தியாகராஜன் எனக்கு பிரசாந்தை நடிக்க வைப்பது விருப்பமே இல்லை. நான் அவனை மருத்துவப் படிப்பிற்கு தான் அனுப்ப நினைத்தேன்.

ஆனால் நடிகர் சத்யராஜ் என் மகன் பிரசாந்தை பார்த்துவிட்டு மறைந்த இயக்குனர் பிரதாப்பிடம் தியாகராஜரின் மகன் ஹேண்ட்சம் ஆக இருப்பார் என்று கூறிவிட்டார்.

அதனால் இயக்குனர் பிரதாப் பிரசாந்தை அவருடைய மலையாள திரைப்படமான டைசியில் நடிக்குமாறு கூறினார் ஆனால் அப்பொழுதும் நான் அவன் மருத்துவ படிக்க வேண்டும் என்று மறுத்துவிட்டேன். அதன் பின்பு பாலு மகேந்திரன் பிரசாந்தி நடிக்க அழைத்தார் அப்பொழுதும் நான் அவரை மறுத்து விட்டேன்.

அதற்குப் பிறகு மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வில் தோல்வியடைந்தால் நடிக்க வைக்கலாம் என்று இருந்தேன் ஆனால் பிரசாந்ததில் தேர்ச்சி பெற்றுவிட்டார்.

மருத்துவக் கல்லூரி செல்வதற்கு மூன்று மாதங்களே  இருக்கும் அந்த நிலையில் தான் வைகாசி பொறந்திருச்சு திரைப்படத்தின் உடைய கதையும் அதற்கான வாய்ப்பும் கிடைத்தது விடுமுறை நாட்களில் ஏதோ நடிக்கட்டும் என்று அனுப்பினேன் அந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது .

அதற்குப் பிறகு பாலு மகேந்திரா நான் கேட்டபோது அனுப்பவில்லையே நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டார் பின்பு பாலு மகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்தார் .

அதைத் தொடர்ந்து ஒரு 17, 18 வயது பையனை வைத்து ஆர்கே செல்வமணி செம்பருத்தி என்ற மிகப்பெரிய திரைப்படத்தை இயக்கி வெற்றி பெறச் செய்தார் அது பிரசாந்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது என்று பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறியிருந்தார்

நடிகர் பிரசாந்திற்கு சிலம்பம் சுற்றுவது, கராத்தே பயிற்சி ,ஸ்கேட்டிங் செய்வது என்று பல திறமைகள் இருந்தது சின்ன வயதில் கற்றுக் கொண்ட திறமைகள் எல்லாம் அவர் சினிமா வாழ்க்கையில் பயன்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார் நடிகர் தியாகராஜன்.

Most Popular