சினிமா

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்.. உருக்கத்துடன் பேசிய வடிவேலு.. முதல்வர் இரங்கல்

பிரபல காமெடி நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. மதுரை விருகனூரில் வசித்து வந்த அவர் உயிரிழந்ததை அடுத்து திரை பிரபலங்கள் அனைவரும் நடிகர் வடிவேலுவின் தாயாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வடிவேலு தனது தந்தையின் ஆப்டிகல்ஸ் கடையை கவனித்து வந்தார். அப்போது தயாரிப்பாளர் ராஜ்கிரன் உடன் ஏற்பட்ட தொடர்பை அடுத்து சென்னை வந்த வடிவேலு தனது திரைத்துறை வாழ்க்கையை தொடங்கினார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நகைச்சுவை நடிகராகவும் குணசத்திர நடிகராகவும் கொலோச்சிய வடிவேலு தற்போது சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களின் அரசனாக விளங்கி வருகிறார். வடிவேலு இல்லாமல் மீம்ஸ் இல்லை என்ற ஒரு நிலைக்கு கொண்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகேசி படத்தின் தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து சில ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்காத வடிவேலு சூரஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை. இந்த நிலையில் தனது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வடிவேலு அவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தற்போது  உடல் நலக் குறைவால் காலமானார். நடிகர் வடிவேலுவின் தாயார் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகர் வடிவேலுவின் தாயாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் தான் மகனை ஆளாக்கி அழகு பார்த்த தாயின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் நடிகர் வடிவேலுவின் இந்த இழப்பை கேட்டு மிகவும் வருந்தினேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலுவுக்கு 5 சகோதரர்கள் இரண்டு சகோதிரிகள் உள்ளனர். தனது தாய் இறந்தது குறித்து வடிவேல் தெரிவித்ததில் தாம் யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது என்று பொங்கல் பண்டிகை ஒட்டி ஆடு மாடு உடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு காலமாகிவிட்டதாக உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top