Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் விஜய் - சங்கீதா பிரிந்து வாழ்கிறார்களா? உண்மை என்ன?

நடிகர் விஜய் – சங்கீதா பிரிந்து வாழ்கிறார்களா? உண்மை என்ன?

- Advertisement -

திரைப்படத்துறையில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும். ஆனால் அதே திரையுலகில் பல ஜோடிகள் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.ரஜினி- லதா,அஜித்- ஷாலினி ,விஜய்- சங்கீதா என பல ஜோடிகள் குடும்பமாக தங்களது வாழ்க்கையில் கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். லண்டனை சேர்ந்த தொழிலதிபர் மகள் தான் சங்கீதா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் நடிகர் விஜய் திரைப்படத்தில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார்.

- Advertisement -

கடைசியாக 2017 ஆம் ஆண்டிலிருந்து அவர் நடித்த அனைத்து படங்களும் வசூலில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. இதனை வெளிப்படையாக தயாரிப்பாளர் தில் ராஜு நம்பர் ஒன் நடிகர் என விஜய் அறிவித்தார். இதனை சில நபர்களால் பொறுக்க முடியவில்லை. அதன் பிறகு இருந்து விஜய் மீது தொடர்ந்து பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

- Advertisement -

விஜய்க்கும் வேறொரு நடிகைக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் மனைவி சங்கீதா அவரை பிரிந்து விட்டதாகவும் வதந்திகளை பரப்பினார்கள்.இதை தொடர்ந்து விஜய் குறித்து நெகட்டிவ் விஷயங்களை கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சில கும்பல் அதையே தொழிலாக செய்து வருகிறது.

இந்த நிலையில் உண்மையில் விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து இருக்கிறார்களா என்று தற்போது பார்க்கலாம். விஜயின் மகள் தற்போது லண்டனில் படித்து வருகிறார். சங்கீதாவுக்கும்  சொந்த ஊர் லண்டன் என்பதால் தன்னுடைய மகளுக்காக அவர் லண்டன் சென்று இருக்கிறார். இதுதான் உண்மையைத் தவிர அவர்கள் இருவருக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை.

திரைப்பட பிரபலங்கள் குறித்து வதந்திகள் வருவது சகஜம் தான். ஆனால் ஒரு குடும்பத்தையே பிரிக்கும் அளவிற்கு பொய்  பரப்புவது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களுடைய குழந்தைகளையும் சேர்த்து பாதிக்கும் என்பதை சிலர் உணர வேண்டும். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி கொடுக்கும் விதமாக சமீபத்தில் நடிகை சங்கீதா ஒரு பேட்டியும் கொடுத்திருக்கிறார். வரும் கோடை விடுமுறை முன்னிட்டு சங்கீதா மீண்டும் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular