தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் பிசியாக நடித்த வருகிறார். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதை விஜய் கவனமாக வைத்திருந்தாலும் அரசியலிலும் விஜய் மெதுவாக காய் நகர்த்தி வருகிறார்.
நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ரத்த தானத்திற்கு என தனி ஆப், விலையில்லா விருந்தகம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் மூலம் செய்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் இணைந்துள்ளது இளைஞர்களை கவரத்தான் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்றும் மாநில முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார். பொதுவாக நடிகர் விஜய் எந்த தலைவர் சிலைக்கும் மாலை போடுங்கள் என்று கூறியதில்லை.
ஆனால் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுங்கள் என விஜய் அறிவித்து இருப்பது அவர் அரசியல் எடுத்து வைக்கப் போகும் முதல் அடிக்கான சான்றாக பார்க்கப்படுகிறது. விஜய் அம்பேத்கர் சென்னைக்கு மாலை போடுவதன் மூலம் தான் யார் பக்கம் இருக்கப் போகிறேன் என்பதையும் உணர்த்திவிட்டார்.
நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பு அம்பேத்கர் வாதிகளை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. விஜயின் இந்த நடவடிக்கை பல்வேறு இளைஞர்களை அம்பேத்கர் பக்கம் அழைத்து வரும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் அம்பேத்கர் உடைய கருத்துக்களை சூர்யா வெகுஜன மக்களுக்கு திரைப்படம் மூலம் சொன்ன நிலையில் தற்போது அந்த வரிசையில் விஜயும் இணைந்துள்ளார்.