நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் மும்முரமாக நடக்கிகிறார். அட்லி படத்துடன் இணைவதற்கு முன்பாக ஒரு சிறிய படத்தில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார்.
இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இது அந்த நிறுவனத்தில் நூறாவது படம் என்பதால் பெரிய அளவில் எடுக்க முடிவெடுத்துள்ளது. தற்போது இந்தப் படத்துக்கு கதை கேட்கும் பணியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே வாரிசு படம் தெலுங்கு இயக்குனர் தான் எடுத்ததால் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர் .
இந்த நிலையில் விஜயின் 68 வது படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட, விக்ரமை வைத்து மகான் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
கதையை நேர்த்தியாகவும் சுவாரசியமாகவும் எடுக்கும் கார்த்திக் சுப்புராஜ் விஜயுடன் இணைந்தால் அது நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்களும் நம்புகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விஜய் சந்தித்து விரைவில் இது குறித்து பேசுவார் என்றும் தெரிகிறது.
இதனால் லியோ படத்திற்குப் பிறகு விஜய் ஏறக்குறைய கார்த்திக் சுப்புராஜ் உடன் தான் இணைவார் என கூறப்படுகிறது
பேட்ட போல் மாஸ் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினால் அது விஜய் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மயில் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.