நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ருத்ரன் படத்திற்கு ப்ரமோஷன் செய்து வருகிறார். அப்போது நிகழ்ச்சி ஒன்றில் சினிமா உலகில் உங்களுடைய மிக நெருங்கிய நண்பர் என்றால் அது யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லாரன்ஸ், விஜய் தான் என்று கூறினார். நடிகர் விஜயை என்னுடைய சிறந்த நண்பர் என்று சொல்லலாம்.
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இருந்து நாங்கள் இருவரும் நண்பராக இருக்கின்றோம். நான் ஆன்மீகத்தில் இருப்பதால் அமைதியாக இருப்பேன். ஆனால் விஜய் எப்போதுமே அமைதியாக இருப்பார். அந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். என் மீது அவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருப்பார்.
என்னுடைய சில்ட்ரன்ஸ் ஹோம் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் உதவி என்று ஒரு போன் செய்தால் விஜய் அனைத்து உதவிகளையும் செய்து விடுவார். என்னுடைய காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் விஜய் ரசிகர்கள் தான். நான் காப்பகத்துக்கு சென்றாலே அண்ணா, படம் பார்க்க வேண்டும் என குழந்தைகள் கேட்பார்கள்.
நான் உடனே விஜய்க்கு கால் செய்து குழந்தைகளுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்து தாருங்கள் என கேட்பேன். அவர் எதற்கு டிக்கெட் நான் உங்கள் காப்பக குழந்தைகளுக்காக சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி பார்த்துக் கொள்வார். நான் தெலுங்கில் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றவேன்.
அப்போது தமிழில் பாடலுக்கு நடனம் அமைக்க பலரும் அழைப்பார்கள். ஆனால் நான் யாருக்கும் செல்ல மாட்டேன். விஜய் மட்டும் என்னை அழைத்தார் என்றால் உடனே அவருக்காக நான் சென்று விடுவேன். ஏனென்றால் விஜய் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ரஜினி சாருக்கு பிறகு விஜய் நல்ல குணங்களை பெற்று இருக்கிறார் என லாரன்ஸ் பாராட்டியுள்ளார்.