Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்..! ஒரு போட்டோவால் ஊர் வாயை மூடினார்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்..! ஒரு போட்டோவால் ஊர் வாயை மூடினார்

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஜய் தற்போது 68வது படத்திற்காக அமெரிக்காவுக்கு சென்று கிராபிக்ஸ் பணிகளுக்கான வேலைகளை மேற்கொண்டு உள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் விஜய் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. விஜய் தன்னுடைய தந்தை மற்றும் தாயை கவனிப்பதில்லை என்றும் அவர்களை பார்ப்பதில்லை என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் பொய் செய்திகளை பரப்பி வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது விஜய் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இதனை அடுத்து நடிகர் விஜய் நேரடியாக அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு தனது தந்தையை சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார். மேலும் தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் இணைந்து நடிகர் விஜய் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் தாய் ஷோபா உடன் எடுத்த புகைப்படம் கடந்த ஆண்டு சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் எஸ் எஸ் யு உடன் போட்டோ வரவில்லை. இதனால் தந்தையே விஜய் மறந்துவிட்டார் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த புகைப்படம் வெளியாக இருக்கிறது மனைவி குழந்தைகளுடனும் விஜய் இருக்கும் புகைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் தந்தை, தாயுடன் விட்டு வைக்காமல் சில மனைவியையும் விஜய் பிரிந்து வேறு ஒரு நடிகையுடன் இருப்பதாக வதந்திகளை பரப்பி வந்தனர்.

அதற்கும் விரைவில் விஜய் தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது. மேலும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் தற்போது விஜய் மீது கோபத்தில் இருக்கிறார்கள். தாமே ஒரு ரஜினி ரசிகர் என்பதால் ஜெய்லர் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் ரஜினியை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Most Popular