Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாஅண்ணன் விஜய்காந்திற்கு தம்பி விஜய் இறுதி மரியாதை மனதை உருக்கிய அந்த நொடி

அண்ணன் விஜய்காந்திற்கு தம்பி விஜய் இறுதி மரியாதை மனதை உருக்கிய அந்த நொடி

நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
நேற்று இரவு தளபதி விஜயும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.

- Advertisement -

நடிகர் விஜய்யின் 68 ஆவது திரைப்படத்துடைய படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த படப்பிடிப்பு தளத்திலிருந்து வந்திருக்கிறார் தளபதி விஜய். அவரை பார்க்கும் பொழுதே கலங்காத நெஞ்சமும் கலங்கும் அளவிற்கு ஒரு சோகம் அவர் முகத்தில் தெரிந்தது .

அவ்வளவு கூட்டங்களுக்கு நடுவில் சோகத்தை மட்டும் மனதில் சுமந்து கொண்டு வந்தார் தளபதி விஜய் .நடிகர் விஜயகாந்தின் முகத்தை பார்க்கும் பொழுது அவர் வெளிப்படுத்திய அந்த உணர்வை வார்த்தையால் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு வருத்தத்தை தரும் வகையில் இருந்தது.

- Advertisement -

தன் இரு கைகளையும் விஜயகாந்தின் முகத்திற்கு நேராக வைத்து தலையை குனிந்து விஜய் கண்கலங்கியது மனதையே உருக்கி விட்டது .நடிகர் விஜய் விஜயகாந்தின் முகத்தை பார்க்கும் பொழுது அவர் மனதில் பழைய நினைவுகள் ஆயிரம் வந்திருக்கும் என்பதை பார்க்கும் பொழுதே தெரிகிறது.

- Advertisement -

செந்தூரப் பாண்டியன் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் விஜயகாந்த் இணைந்து நடித்திருந்தார் .இந்த திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார் ஆனால், விஜய் உண்மையிலேயே அவரை அண்ணனாகத்தான் பார்த்தார் என்பதை இன்று அந்த இரண்டு மூன்று நிமிட காட்சிகள் நமக்கு உணர்த்தி இருக்கிறது.

பிறகு விஜயகாந்தின் மனைவியான பிரேமலதாவிடம் துக்கம் விசாரித்து விட்டு திரும்பினார் . அப்படி  திரும்பும் பொழுது மீண்டும் ஒருமுறை விஜயகாந்தின் முகத்தை நிண்டு நிதானமாக கவனித்தார் நடிகர் விஜய். அந்த பார்வையில் இனி இந்த முகத்தை எப்பொழுது பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் வெளிப்பட்டது.

விஜயகாந்தின் மறைவால் தமிழ் சினிமாவே கலங்கி இருக்கிறது. இன்னும் பல பிரபலங்கள் அவரின் உடலுக்கு கண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மேலும் தளபதி விஜய்யின் தந்தையான எஸ் .ஏ சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர்களுக்குள் ஒரு நல்ல உறவும் அப்பொழுது இருந்தது. தற்பொழுது எஸ் .ஏ சந்திரசேகர் வெளிநாட்டில் இருப்பதால் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular