தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியல் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வர போகிறோம் என்று அடிக்கடி கூறி வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் ஆசையை பலமுறை கூறி வந்திருக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை விஜய் தொடங்கி அதன் மூலம் பல நல்ல விஷயங்களையும் மக்களுக்கு நிதி உதவியும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இன்னும் மூன்று மாதங்களில் உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்பது குறித்து நடிகர் விஜய் ஆலோசித்து வருகிறார்.
இதற்காக அரசியல் கட்சியை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கி போட்டியிடலாமா இல்லை சட்டமன்றத் தேர்தலை பார்த்துக் கொள்ளலாமா என்பது குறித்து தற்போது பனையூரில் உள்ள தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருகிறார்.
தளபதி 68 திரைப்படம் ஆன கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீஸ் ஆன பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இரண்டு ஆண்டுகள் சினிமாவுக்கு ஓய்வு போட்டுவிட்டு அரசியல் கட்சியை வளர்க்கும் பணியில் நடிகர் விஜய் ஈடுபடப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் இன்னும் ஒரு மாதத்தில் கட்சியை தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் நடிகர் விஜய் சேர்ந்த கட்சியினர் நிறுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சினிமாவில் நடிகர் விஜய் உச்சத்தில் உள்ள நிலையில் தற்போது அவர் அரசியலுக்கு சென்றால் அது மிகப்பெரிய பாதகமாக முடியும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.