நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கான பணிகள் தற்போது தொடங்கிவிட்டது. லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜயின் திரைப்படம் தொடர்ச்சியாக 200 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகளில் மட்டும் வசூல் செய்கிறது. இதனை தவிர்த்து ஓடிடி, சாட்டிலைட், இசை உரிமம் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் என அனைத்தையும் சேர்த்தால் சுமார் 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.
அதில் குறிப்பாக லியோ திரைப்படம் 500 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி இருக்கிறது. இதன் மூலம் நடிகர் விஜயின் கால்ஷீட் வாங்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடுகிறார்கள். தற்போது நடிகர் விஜய் லியோ திரைப்படத்திற்கு 130 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருந்ததாக தகவல் வெளியானது.
தற்போது தளபதி 68 திரைப்படத்திற்கு அவர் கால் சீட்டை வாங்க 150 கோடி ரூபாய் வரை தர தயாரிப்பு நிறுவனங்கள் முன் வந்திருக்கிறதாம். இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் 140 முதல் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருந்த நிலையில் தற்போது விஜய் 150 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையும் விஜய்க்கு சேர்ந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த போது ஆசியாவிலே ஜாக்கிஜானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையை அவர் பெற்று இருந்தார். தற்போது அந்த பெருமை நடிகர் விஜய்க்கு கிடைத்துள்ளது. நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக கமல்ஹாசன் 130 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். தற்போது ரஜினியின் சம்பளம் 80 முதல் 90 கோடி ரூபாய் வரை சரிந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.