தாயோ தந்தையோ சினிமாவில் நடித்திருந்தால் அவர்களின் வாரிசு சினிமாவிற்கு வருவது மிகவும் சுலபம். அப்படி தங்கள் வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பதை நிப்போட்டிஸம் என்று கூறுவார்கள்.
அப்படி அவர்கள் நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் சாதாரணமாக தந்தையின் தொழிலை மகனோ மகளோ கற்றுக்கொண்டு பரம்பரையாக அது செய்வது ஒன்றும் தவறில்லை என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்தும் இருக்கிறது.
இந்த வகையில் தற்பொழுது நடிகை தேவயானி தனது மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்தப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜ்குமார் ஒரு பேட்டியின்போது தன்னுடைய மூத்த மகள் தற்பொழுது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாள்.அவளை விரைவில் நான் கதாநாயகி ஆக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
1999 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி இருவரும் நடித்த நீ வருவாய் என என்ற திரைப்படம் வெளிவந்தது. திரைப்படத்தில் தல அஜித் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. பாடல்களும் இன்று வரை கொண்டாட கூடிய இடத்தில் இருக்கிறது.
22 வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் தன் மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யின் மகனைத்தான் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஆக்க இருக்கிறேன் என்றும் பகிரகமாக கூறியிருந்தார்.
ஆனால் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராகப் போவதாக தான் கூறப்படுகிறது. அவர் தற்பொழுது ராஜ்குமாரின்அறிவிப்பின்படி கதாநாயகனாக நடிக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்படுகிறது.
விஜயின் மகனை அவர் கதாநாயகனாக ஆக வேண்டும் என்று கூறியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நீ வருவாய் என திரைப்படத்தின் அஜித் உடைய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் தான் நடிக்க இருந்தாராம் சில பல காரணங்களால் அவை நடக்காமல் போகிவிட்டதாம். அதனால் தான் இயக்குனர் ராஜ்குமார் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்ற ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.