நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணி முதலில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது. இதில் நடிகர் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் படத்தின் நீளம் கருதி சாந்தனு காட்சிகளை லோகேஷ் கனகராஜ் அதிரடியாக நீக்கிவிட்டார். இதனால் லோகேஷ்க்கும் சாந்தனுவுக்கும் இடையில் சின்ன மனஸ்தாபம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாந்தனு ராவண கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் நேற்று தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணியின் சாந்தனு ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாந்தனு 4 நாட்களுக்கு முன் தன்னை வீட்டுக்கு டின்னருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழைத்திருந்தார். ஆனால் ராவணக் கூட்டம் படம் ரிலீஸ் ஆக அலைந்து கொண்டிருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் லியோ பட தளத்திற்கு விஜய் சாரை பார்ப்பதற்காக சென்றேன். அப்போது விஜய் சாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது லோகேஷ் அங்கிருந்து வந்தார். அப்போது விஜய் சாரிடம் என்னைக் குறித்து புகார் அளித்தார். அண்ணா இவன் ஓவரா பண்றான். நான் என் வீட்டுக்கு சாப்பிட அழைத்தேன். ஆனால் வரமாட்றான். என்ன என்று கேளுங்கள் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த விஜய் நீ அவன கூப்பிட்டு பண்ண வேலைக்கு அவன் வீட்டுக்கு வேற வருவானா என்று காமெடியாக பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டதும் மூன்று பேரும் சிரித்து விட்டார்களாம். அதாவது சாந்தனு காட்சிகள் நீக்கப்பட்டதற்கு விஜயை லோகேஷ் கனகராஜை செல்லமாக பேசி இருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.