சினிமா

நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக் குறைவு ! அதிக காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதி !

Actor Vikram

சினிமாவிற்கு எந்த அளவிற்கும் சென்று முழு அர்ப்பணிப்பை கொடுக்கும் நடிகர்கள் யார் என்று கேட்டால், பெரும்பாலானோர் நடிகர் விக்ரமையே சொல்வர். 1990ஆம் ஆண்டு என் காதல் கண்மணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். நடிப்பிற்கு பெயர் போன இவர் எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடித்து முடித்துக் கொடுப்பார். பிதாமகன், அந்நியன், ஐ என பல வேடங்களில் வந்து ரசிகர்களை திருப்பதிப்படுத்தி அவரகக்து கைத்தட்டுகளை பெற்றவர் விக்ரம்.

தற்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் அவர் அனுமதிக்கப்படும் போது அதிக காய்ச்சல் காய்ச்சலுடன் இருந்ததாகவும் தற்போது அது குறைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

Advertisement

அவரது நிலை சீராக இருப்பதால் நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். நடிகர் விக்ரமுக்கு வயது 56. இந்த வயதில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் இதுவும். விரைவில் அவர் பூரணமாக குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கலாம். மேலும், திங்கட்கிழமை நடைபெறும் கோப்ரா இசை வெளியிட்டு விழாவில் அவர் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.

விக்ரம் உட்பட பல பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பெரிய பட்ஜட்டில் தயாராகி வரும் இந்தப் படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கடந்த 2/3 வருடங்களாக விக்ரமின் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான விருந்து கிடைக்கப்போகிறது.

Advertisement

ஜனவரி மாதம் மஹான் எனும் சூப்பர் ஹிட் படத்தை அளித்து தன் கம்பேக்கை அறிவித்தார் விக்ரம். ஆனால் அதை ரசிகர்களால் தியேட்டரில் கொண்ட முடியவில்லை. அந்தப் பசியை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் கோப்ரா மற்றும் அதற்கு அடுத்த மாதம் வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாகவும் தீர்துக்கொள்வர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top