சினிமா

இளைஞர்களுக்கு முத்தான அட்வைஸ் சொன்ன விக்ரம்.. கோப்ரா விழாவில் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்பொழுது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படம். வருகின்ற 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று கோப்ரா திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியாகியிருந்தது. இதில் விக்ரம் அந்நியன் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜிடம் பேசியது போன்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தசாவதாரத்தில் கமல் 10 வேடத்தில் வருவது போன்று விக்ரம் கோபுர திரைப்படத்தில் பல வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

Advertisement

இதைத்தொடர்ந்து தற்பொழுது கோப்ரா திரைப்படத்திற்கான பிரமோஷனில் நடிகர் விக்ரம் ஈடுபட்டிருக்கிறார். பொதுவாக இப்படி திரைப்படங்களுக்கான பிரமோஷன் களை வெளிநாடுகளில் தான் செய்வார்கள். முதன்முதலாக நடிகர் கமலஹாசன் தான் நடித்த விக்ரம் திரைப்படத்திற்கான பிரமோஷனை தமிழ்நாட்டில் செய்து தொடங்கி வைத்தார். இதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தற்போது நடிகர் விக்ரமும் தன்னுடைய கோப்ரா திரைப்படத்திற்கான பிரமோஷனை தமிழ்நாட்டில் தொடங்கி இருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திருச்சி மற்றும் மதுரையில் கோப்ரா திரைப்படத்திற்கான பிரமோஷன் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24ஆம் தேதி கோயம்புத்தூரிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி சென்னையிலும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொச்சியிலும் ஆகஸ்ட் 27ஆம் தேதி பெங்களூரிலும் ,ஆகஸ்ட் 28ஆம் தேதி ஹைதராபாதிலும் நடைபெற இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Advertisement

சென்னையில் கோப்ரா திரைப்படத்திற்கான பிரமோஷன் போது தான் கோபுர திரைப்படத்தின் டிரைலரும் வெளியாக்கப்பட்டது. இப்படி தன் படத்திற்கான பிரமோஷன் விழாவில் கலந்து கொள்ளும் விக்ரம் இளைஞர் சமுதாயத்திற்கு நிறைய நல்ல கருத்துக்களையும் கூறி வருகிறார்.நடிகர் விக்ரம் இளைஞர்களை பார்த்து பூமியை பாதுகாப்பதில் எங்கள் தலைமுறை தான் சொதப்பிவிட்டது. இளம் தலைமுறையான நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சுற்றுப்புற சூழல்களில் உள்ள மாசுகளை நீக்கி பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

மேலும் திருச்சியில் நடந்த பிரமோஷன் விழாவில் நடிகர் விக்ரம் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ உறுதியாக இருக்க வேண்டும். தங்களின் இலக்குகளை எளிதில் விட்டு விடக் கூடாது.என்னால் நடக்கவே முடியாது அதை கடந்து நடக்க ஆரம்பித்தேன். தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை என்று இன்றைய கால இளைஞர் சமுதாயத்திற்கு நடிகர் விக்ரம் அறிவுரை கூறியிருக்கிறார்.

இன்றைய கால இளைஞர்களுக்கு இது மிகவும் அவசியமான அறிவுரைகள் அமைந்திருக்கிறது. இன்றைய காலத்தில் இளைஞர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை சுட்டிக்காட்டி தான் நடிகர் விக்ரம் இந்த அறிவுரையை கூறி இருக்கிறார்.ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் இந்த இடத்தில் நடிகர் விக்ரம் ஒரு தந்தையாக இருந்தும் சிந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top