Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாதங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி.. முழு விவரம்

தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி.. முழு விவரம்

பொன்னியின் செல்வன் 2 வெற்றியால் தற்போது உற்சாகத்தில் இருந்த நடிகர் விக்ரமுக்கு ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை போல் இரண்டாவது பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

- Advertisement -

தற்போது படம் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்திருக்கிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக விளம்பரப் பணிகளில் நடிகர் விக்ரம் ஈடுபட்ட நிலையில் தற்போது பா ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் இணைந்தார்.

- Advertisement -

இந்த படத்தின் 80 சதவீத காட்சிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மீதமுள்ள 20% காட்சிகள் படப்பிடிப்பு தொடங்க இருந்ததும் இந்த நிலையில், ஒரு சண்டைக் காட்சிக்காக நடைபெறும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரமுக்கு விபத்து ஏற்பட்டது.

- Advertisement -

இதில் நடிகர் விக்ரம் விலா எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நடிகர் விக்ரம் வலியால் துடித்திருக்கிறார்.  இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் நடிகர் விக்ரம் ஈடுபட்டு உள்ளார்.

நடிகர் விக்ரம் மீண்டும் தங்கலான் திரைப்படத்தில் வந்து இணைய நீண்ட காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கலான் திரைப்படத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விக்ரம் மீண்டும் உடல் நலம் தேறி வரவேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ள நடிகர் விக்ரம் விரைவில் உடல்நலம் பூரண குணமடைந்து எழுந்து நிற்க நினைக்கிறேன். மீண்டும் தங்கலான் படத்தில் வந்து இணைவேன்.உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று விக்ரம் கூறியுள்ளார்.

Most Popular