சினிமா

சர்பரைஸ் கொடுத்த சியான் விக்ரம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி.. இனி கலக்கல் தான்

நடிகர் விக்ரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான நடிப்பு, கடின உழைப்பு மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விக்ரம்.ஒரு காலத்தில் விளம்பர நடிகராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தனது சினிமா பயணத்தை தொடங்கிய விக்ரம் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு அண்மைக்காலங்களாக சோகமான சூழலே நிலவியது.

கடந்த மாதம் விக்ரமுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது ரசிகர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமும் அதிர்ச்சி அடைந்தது. இதிலிருந்து மீண்டு வந்த விக்ரம் தான் நலமாக இருப்பதாகவும் பொய் செய்திளை வெளியிடும் ஊடகங்களை கடுமையாகவும் கிண்டல் செய்து கோப்ரா திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசினார்.

இதே போன்று சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக கோப்ரா திரைப்படம் மீண்டும் தள்ளிப் போனதாக அறிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்பட டீஸர் வெளியீட்டு விழாவிலும் நடிகர் விக்ரம் பங்கு பெறவில்லை.இதனால் விக்ரம் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர். தற்போது அவர்களுக்கு சர்பரைஸ் கொடுக்கும் விதமாக இரண்டு நல்ல செய்திகள் வந்துள்ளது. ஒன்று கோப்ரா திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

மற்றொன்று நடிகர் விக்ரம் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இன்று இணைந்துள்ளார். இத்தனை ஆண்டுகாலமாக விக்ரம் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகிய நிலையில் தற்போது ட்விட்டரில் கணக்கு தொடங்கி இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமது உடல் நலம் பற்றி வதந்தி கிளம்பிய நிலையில், அப்போதே சமூக வலைத்தளத்தில் வரவேண்டும் என்று விக்ரம் முடிவு எடுத்து தற்போது இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று தனது படங்களின் ப்ரோமோஷன் பணியையும் ட்விட்டர் மூலம் செய்ய நடிகர் விக்ரம் முடிவு எடுத்துள்ளார். நடிகர் விக்ரம் தனது டிவிட்டர் கணக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அதிக அளவில் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top