சினிமா

மீண்டும் தள்ளிப்போகும் கோப்ரா ? இம்முறை உதயநிதி ஸ்டாலின் காரணமா?

நடிகர் விக்ரம் நடித்து வெளியாக உள்ள கோபுரா திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் நிறைய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க, தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்தார்.இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து பாடல்கள் ஹிட் அடித்துள்ளனர்.

விக்ரமுக்கு ஜோடியாக கே ஜி எஃப் புகழ் ஸ்ரீநிதி செட்டி நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கோபுர திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 90 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள கோபுரத் திரைப்படம் சில காரணங்களால் அடிக்கடி தள்ளிப்போனது. எனினும் இயக்குனர் தான் படத்தை தாமதப்படுத்தி விட்டதாக தயாரிப்பாளர் லலித் குமார் குற்றம் சாட்டினார்.

Advertisement

இதற்கு படத்தின் இயக்குனர் தம் மீது எவ்வித தவறும் இல்லை, தயாரிப்பாளர்கள் சரியாக பணம் தராதது படத்திற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.கொரோனா போன்ற பிரச்சனையைத் தாண்டி தற்போது படம் நிறைவடைந்தது.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளார்.பல தடைகளுக்குப் பிறகு தற்போது கடைசியில் படம் ரிலீஸ் ஆக இருந்தது.இந்த நிலையில் படம் மீண்டும் தள்ளிப் போக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதற்கு காரணம் இந்தியா முழுவதும் அமீர்கான் நடித்த லால் சிங் தாதா திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் ரிமெக் செய்து அமீர்கான் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

பெரும் எதிர்பார்ப்பு இடையே வெளியாகியுள்ள இந்த படம் ஹிந்தி ,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. ஒரே நாளில் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டு திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனால் இரு படங்களின் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்பதால் கோப்ரா திரைப்படத்தை தள்ளி வைக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திர தின விடுமுறையை மையமாக வைத்து கோப்ரா கோப்ராவை ரிலீஸ் செய்து விடலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினால் மீண்டும் தள்ளிப் போக உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top