Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிய விக்ரம்.. என்ன லூக் சார் இது?

ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிய விக்ரம்.. என்ன லூக் சார் இது?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியவர் விக்ரம் ஹீரோ என்றால் டிப் டாப் உடை அணிந்து தான் இருக்க வேண்டும் என்பதை முதன்முறையாக உடைத்து சேது, பிதாமகன் போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொண்டவர்.

- Advertisement -

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பெற்ற வெற்றியின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் விக்ரமுக்கு தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தம் வாழ்நாளில் கிடைக்காத அனுபவம் தங்கலான் படத்தில் கிடைத்தது என்று நடிகர் விக்ரம் கூறியிருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அந்த படம் முடிந்து அடுத்த சில நாட்களிலே விக்ரம் தனது புதிய படத்திற்காக கெட்டப்பில் மாற்றிவிட்டார்.

- Advertisement -

இதில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வித்தியாசமாக மீசை முடியை வைத்துக்கொண்டு விக்ரம் இருக்கிறார். இது எந்த படத்திற்கு என்று இதுவரை தெரியவில்லை. ஏனென்றால் தன்னுடைய அடுத்த திரைப்படம் என்ன என்பது குறித்து விக்ரம் இதுவரை அறிவிக்கவில்லை.

- Advertisement -

மாரி செல்வராஜ் படத்தில் மகன் துரு விக்ரம் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை விக்ரம் நடிக்கலாம் என கூறப்பட்டது. மேலும் லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் தோன்றலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதுவும் தெரியவில்லை இந்த நிலையில் நடிகர் விக்ரமின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சில நடிகர்கள் ஹேர் ஸ்டைல் கூட மாற்ற யோசிக்கும் நிலையில் நடிகர் விக்ரம் மட்டும் எப்படி தைரியமாக இவ்வாறு தனது உருவத்தையும் மாற்றிக் கொள்கிறார்.

இவர் ஹாலிவுட் இருக்க வேண்டிய நடிகர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். தங்கலான் படத்தின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டது. இதனை எடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்த நிலையில் நடிகர் விக்ரம் மீண்டும் திரைப்படங்களுக்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular