இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். இதற்கு முன்பு கில்லி,கிரீடம் போன்ற திரைப்படங்களை தல தளபதிக்கு இருக்கும் நண்பர் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார் விமல்.
இப்படி யாரோ ஒருவராக இருந்தவரை,அடையாளம் காட்டிய திரைப்படம் பசங்க திரைப்படம் ஆகும். இதைத் தொடர்ந்து அவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில் களவாணி திரைப்படத்தை நடித்தார்.
இந்த திரைப்படம் அவர் சினிமா வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். இயக்குனர் சற்குணத்திற்கு இது முதல் திரைப்படம் என்றாலும் திரைப்படத்தின் கதையும் நடிகர் விமல் உடைய நடிப்பும் ரசிகர்கள் மனதில் பெரும் இடம் பிடித்தது .அதனுடைய தாக்கத்தால் தான் 10 வருடம் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்கினார்கள். ஆனால் அது அந்த அளவிற்கு பிரபலம் அடையவில்லை.
இவைத்தொடர்ந்து நடிகர் விமல் கலகலப்பு, மாப்பிள சிங்கம், தூங்கா நகரம், மன்னர் வகையறா என்று ஏறத்தாழ 29 திரைப்படங்களை நடித்திருக்கிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் இவரும் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்கள்.
அந்த திரைப்படம் நடிக்கும் பொழுது சிவகார்த்திகேயனை விட விமல் பிரபலமாக இருந்தது போல் தெரியும். அந்த காலகட்டத்தில் அதிக திரைப்படங்கள் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை. ஆனால் விமல் ஓரளவு சில திரைப்படங்களை நடித்து பிரபலமாக இருந்தார்.
ஆனால் தற்பொழுது அப்படியே நிலை மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் விமலின் திரைப்படங்கள் வெளிவருவது அதிகம் தெரிவதில்லை. ஆனால் சிவகார்த்திகேயனும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதற்கு என்ன காரணம் என்று பலரிடமும் பல கேள்விகள் எழுகிறது. அதற்கான விளக்கம் தற்பொழுது தெரிந்திருக்கிறது. நடிகர் விமல் குடிக்கும் பழக்கம் உடையவரா அதிலும் சில காலங்களாக அதிகமாக குடிக்க அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டாராம்.
போன ஆண்டு இவர் நடித்த விலங்குகின்ற வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த தெய்வ மச்சான் ,குலசாமி என்ற இரண்டு திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளிவந்தது. ஆனால் வெளிவந்தது பலருக்கும் தெரியவில்லை.
ஏனெனில் அந்த கதைகள் அந்த அளவிற்கு பிரபலம் அடையவும் இல்லை. அவருடைய குடியால் அவர் ஒரு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கவோ சிறந்த முறையில் நடிக்கவும் தகுதியுடையவராக இல்லை. இதுதான் காரணமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அவருடைய நடிப்புத் திறனுக்காக இன்னும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சண்டைக்காரி,பாட்டன் சொத்து,மஞ்சள் குடை லக்கி என்று நான்கு திரைப்படங்களை நடிக்க இருக்கிறார் நடிகர் விமல். இந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு அவருடைய குடிப்பழக்கத்தை விட்டால் நிச்சயமாக வரும் விரைவில் சிறந்த நடிகர்களுள் ஒருவர் ஆகிவிடுவார்.