Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாஅச்சச்சோ..!! மறுபடியுமா? பட்ட இடத்திலேயே பட்டு துன்பப்படும் விசால்

அச்சச்சோ..!! மறுபடியுமா? பட்ட இடத்திலேயே பட்டு துன்பப்படும் விசால்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தற்பொழுது நடிகர் சங்க தலைவராகவும் விளங்கி வருகிறார். இவர் ரசிகர்களால் ஆக்சன் ஹீரோ என்றும் கொண்டாடப்பட்டு வருகிறார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த சண்டக்கோழி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் சண்டக்கோழி 2 என்று அடுத்த பாகத்திலும் கதாநாயகராக நடித்தார். இவர் அயோக்கியா,ஆக்சன் எனிமி என்ற தொடர்ந்து பல படங்களை நடித்தாலும் ஏதும் வெற்றி பெறவில்லை.

இதைத்தொடர்ந்து தற்பொழுது வினோத் குமார் இயக்கத்தில் விஷால் லத்தி என்ற படத்தை நடித்திருக்கிறார். லத்தி திரைப்படத்தின் கதாநாயகியாக விஷாலோடு சமர் திரைப்படத்தில் இணைந்து நடித்த சுனைனா நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் இரண்டு வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. அதில் விஷால் ஒரு காவல் அதிகாரி என்பது தெரிய வருகிறது.காவல் அதிகாரியான விஷாலை காக்கி உடையோடு ஒரு ரவுடி கூட்டமே கட்டி வைத்த அடிப்பது போன்று காட்சிகள் டீசரில் வெளியாகி உள்ளது. மேலும் அதில் விஷால் ரத்தம் சிந்தும் முகத்தோடு சற்றும் பயமில்லாமல் தப்பு செய்யும் கிரிமினல் உனக்கு இவ்வளவு தைரியம் என்றால், அதை தட்டிக் கேட்கும் காவலன் நான் எனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்று துணிச்சலாக பேசும் வசனம் ரசிகர்களிடையே லத்தி படத்தின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இவ்வாறு இரத்தம் தெறிக்க தெறிக்க எடுக்கப்பட்டிருக்கும் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

- Advertisement -

இதை தொடர்ந்து விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்ததை தொடர்ந்து ஒரு சண்டைக் காட்சியும் எடுக்கப்பட்டது. அப்பொழுது விஷாலிற்கு மீண்டும் காயம் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பதோடு அடுத்தடுத்து காயமும் பட்டு வருகிறது என்று ரசிகர்கள் வருத்தம் அடைகிறார்கள்.

- Advertisement -

Most Popular