நடிகர் விஜயகாந்த் மறைவு திரையுலகையும் தமிழ் மக்களையும் ஆழ்ந்த வருத்தத்தில் தள்ளியது. இரு தினங்கள் அவரது உடலைக் காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். அன்று பார்க்க இயலாதா திரையுலகினர் சென்னை திரும்பிய பிறகு அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அண்மையில் சூர்யா, கார்த்தி, அருண் விஜய் ஆகியோர்களை தொடர்ந்து இன்று நடிகர் விஷால் மற்றும் ஆர்யா கண்ணீர் சிந்தினர். விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் சிக்கி இருந்ததால் அவர்களால் வர இயலவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
புரட்சித் தளபதி விஷால் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இதில் நடிகர் விஜய்யின் மீது செருப்பைக் கொண்டை எரிந்ததைக் குறித்து தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் போது கூட்டத்தில் யாரோ ஒரு நபர் அவரின் மேல் செறுப்பைக் கொண்டு எரிந்துள்ளார்.
முதலில் இது வதந்தி என யாரோ வேண்டுமென்றே எடிட்டிங் செய்ததாக சொன்னார்கள். ஆனால் பிறகு உண்மை எனத் தெரிந்ததும் இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் விஜய் இதையெல்லாம் கண்டுகாமல் இரு தினங்களில் மக்கள் பணியைச் செய்ய சென்றுவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து நடிகர் விஷாலிடம் கேட்டபோது அவர், “ கலை உலகில் தன்னை உயர்த்திய அண்ணனுக்கும் தமிழ் திரையுலக நடிகர் சங்கத்தை மீட்டெடுத்த நபருமானா அண்ணன் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார். அவர் மீது இவ்வாறு தவறான செயலைச் செய்தது மிகவும் தவறு. ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் இது போன்ற விஷயங்களை தடுப்பது கடினமே. ” என்றார்.
நடிகர் விஜய் இதையெல்லாம் துளியும் கண்டுகமாட்டார். தற்போது இலங்கையில் வெங்கட் பிரபுவுடன் கோட் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். ஏப்ரல் 2வது வாரத்தில் உலகெங்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.