சினிமா

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படத்தை நெஞ்சில் பச்சைக் குத்திய புரட்சித் தளபதி விஷால்… !

Vishal and MGR

சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி, தனுஷ் – சிம்பு, விஜய் – அஜித் மோதலுக்கு முன்னர் கோலிவுட்டின் உயரத்தில் நின்றது எம்.ஜி.ஆர் – சிவாஜி கிளாஷ். இருவரும் நடிப்புத் திறனில் சிறந்து விளங்கினர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதற்கு மேல் ஒரு படி சென்று தமிழகத்துக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்து மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

இன்று சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் பல பேரின் ரோல் மாடலாகவும் இவர் திகழ்கிறார். நம் இளையதளபதி விஜய் கூட அவருடைய பாணியைப் பார்த்து வளர்ந்தவர் தான். மற்றொரு எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான நடிகர் விஷால் நேற்று தன் புரட்சித் தலைவர் மேல் வைத்திருக்கும் பாசத்தை மேல்தூக்கி காட்டினார்.

Advertisement

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை தன் மார்பில் பச்சைக் குத்தி அதை டிவிட்டரில் பதுவிட்டார் விஷால். புரட்சித் தலைவரின் படத்தை மார்பில் அணிந்த புரட்சித் தளபதி டைட்டிலில் சமூக வலைதளங்களில் இது பரவி வருகிறது. எம்.ஜி.ஆரின் படத்தை நெஞ்சில் சேர்ததொடு இல்லாமல் தனது தலைவரைப் பின்பற்றும் வகையில் தன் தாயார் பெயரில் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால்.

நடிகர் விஷால் தற்போது மார்க் ஆன்டனி எனும் படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top