Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாபுரட்சி தளபதி விசால் எடுக்கும் விஸ்வரூபம்.. அடுத்த 6 படம் கைவசம் பாருங்க!

புரட்சி தளபதி விசால் எடுக்கும் விஸ்வரூபம்.. அடுத்த 6 படம் கைவசம் பாருங்க!

- Advertisement -

2018 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை திரைப்படத்திற்கு பிறகு வந்த சண்டக்கோழி 2, அயோக்கிய ,ஆக்சன், சக்கரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற ஏழு திரைப்படங்களும் படுதோல்வி அடைந்தது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தால் நடிகர் விஷால்.

இந்த நிலையை தன்னுடைய விதியை மாற்றுவதற்கு தற்பொழுது ஒரு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார் நடிகர் விஷால். ஆரம்ப காலத்தில் நடிகர் விஷால் நடித்த சண்டக்கோழி செல்லமே தாமிரபரணி போன்று திரைப்படங்கள் ரசிகர்களால் பெருமளவு போற்றப்பட்டது. அதை உணர்ந்த விஷால் தற்பொழுது மீண்டும் தன் படங்களை வெற்றி அடைய செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஷால்  மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து மேலும் நடிகர் விஷால் 2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .எனவே இந்த திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகத்தையும் நடிகர் விஷால் நடிப்பதோடு இந்த திரைப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஷால் நடித்த திரைப்படங்களில் 150 நாளுக்கு மேல் திரையரங்கங்களில் ஓடிய தாமிரபரணி திரைப்படத்தின் உடைய இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் மீண்டும் ஒரு திரைப்படம் நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை படபிடிப்பு  நடக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் 300 கோடி ரூபாய் செலவில் இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யாவை வைத்து பாகுபலி போன்று பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

மேலும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஷால் ஒரு திரைப்படம் நடிக்க இருக்கிறார்.
இவற்றைத் தொடர்ந்து இயக்குனராக 2வது படத்தையும் விஷால் இயக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு தேவையான முன் ஏற்பாடுகளை இந்த ஆண்டு இறுதியில் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எந்த ஏழு திரைப்படங்களை ஈடு செய்வதற்காக நடிகர் விஷால் இந்த ஆறு திரைப்படங்களையும் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படங்கள் எல்லாம் நடிகர் விஷாலுக்கு வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Most Popular