Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாதோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்கள் 2023ல் கம் பேக் திரைப்படங்கள்

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்கள் 2023ல் கம் பேக் திரைப்படங்கள்

2023 இல் இருக்கும் நாம் 2024 நோக்கி செல்ல இருக்கிறோம். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலம் சினிமாவில் கம் பேக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

கடந்த சில வருடங்களாக எந்த திரைப்படங்களும் வெற்றி பெறாத நிலையில் இந்த ஆண்டு வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு ஒரு நல்ல வரவேற்பு தந்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் மூலம் விஷால் தமிழ் சினிமாவிற்கு ஒரு கம்பாக் கொடுத்து இருக்கிறார்.

நடிகர் அசோக் செல்வதற்கு 2022 சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை ,ஹாஸ்டல் ,நித்தம் ஒரு வானம், எஸ்டேட் என்ற திரைப்படங்களும் வெளிவந்தது ஆனால் ,எந்த வரவேற்பையும் பெறவில்லை .ஆனால் இந்த ஆண்டு 2023 இல் வெளிவந்த போர் தொழில் மற்றும் சபாநாயகர் என்ற இரண்டு திரைப்படங்களின் மூலமும் நடிகர் அசோக் செல்வன் கம் பேக் கொடுத்திருக்கிறார். அதிலும் போர் தொழில் சினிமா வாழ்வில் இவருக்கு  மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதே போல் 2022 வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தோல்வியை தந்தது .நடிகர் சிவகார்த்திகேயன் இருந்த உச்சத்திற்கு பிரின்ஸ் மண்ணை கவியது எதிர்பார்க்காத ஒன்றாகும். அதை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு தந்தது. விட்ட இடத்தை இதன் மூலம் பிடித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் .

- Advertisement -

நடிகர் சித்தார்த் சில வருடங்களாக சிகப்பு மஞ்சள் பச்சை, அருவம் ,டக்கர் என்றெல்லாம் திரைப்படங்களின் நடித்திருக்கிறார் .ஆனால் இந்த ஆண்டு வெளிவந்த சித்தா என்ற திரைப்படம் நல்ல கதை கலத்தைக் கொண்டு அமைந்திருந்தது .அதில் அவருடைய நடிப்பும் வரவேற்கும் வகையில் இருந்தது. இதன் மூலம் நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெற்று இருக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா என்று இது போன்ற ஹாரர் மூவிகளின் பாகங்களை நடித்து வந்த இவர் ருத்ரன், சந்திரமுகி 2 என்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இவை எல்லாம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் தோல்வியடைந்தது ஆனால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்கப்பட்டு வெற்றியடைந்திருக்கிறது இந்த ஆண்டில் இவருடைய சிறந்த திரைப்படமாக இந்த திரைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் சந்தானத்திற்கு இந்த ஆண்டு டிடி ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தாண்டி அதிக வரவேற்பு இருந்தது .ஆனால் இதே ஆண்டில் வெளிவந்திருக்கும் 80ஸ் பில்டப் என்ற திரைப்படம் அந்த அளவிற்கு தற்பொழுது வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular