சினிமா

தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம்..!! இளம் நடிகை வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு

திரை உலகில் தந்தையோ தாயோ முன்னணி நடிகர்களாகவும் இயக்குனர்களாகவோ இருக்கும் பட்சத்தில் அவர்களின் வாரிசுகள் திரையுலகுக்கு வருவது மிகவும் சுலபமாகிறது. சிவாஜியின் மகனாக பிரபு, விஜயகுமாரின் மகனாக அருண் விஜய், எஸ்வி சந்திரசேகரின் மகனாக விஜய், சிவகுமாரின் மகனாக சூர்யா ,கார்த்திக், சிரஞ்சீவியின் மகனாக ராம்சரண், மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ,கமலின் மகளாக ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன், மேகனாவின் மகளாகிய கீர்த்தி சுரேஷ் என்று தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் போன்ற எல்லா மொழிகளிலும் தங்கள் வாரிசுகளை சினி உலகில் கொண்டு வருகின்றனர்.

இதனால் திறமை வாய்ந்த இளைஞர்களும் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களும் வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனரான சங்கரின் மகள் அதிதி சங்கர் கார்த்திக் நடித்த விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருக்கிறார்.

இதை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அதிக ரசிகர்களைக் கொண்ட சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் அதிதீஷங்கர் கதாநாயகியாக இணைந்து இருக்கிறார். இவர் நடித்த விருமன் திரைப்படத்தில் மதுரவீரன் என்ற பாடலின் டீசர் அண்மையில் வெளியாகி உள்ளது .அதில் அவர் ஆடும் நடனம் துள்ளலாக இருந்தது .இதனால் ரசிகர்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார் .அதிதி சங்கர் நடிக்கும் மாவீரன் திரைப்படமும் இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான ஆதரவுகள் ரசிகர்களிடையே அதிதி சங்கருக்கு கிடைக்கின்ற இந்த நிலையில் இவருக்கு எதிரான சர்ச்சைகள் கிளம்புகின்றன. ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஆத்மிகா செல்வாக்கு மிக்கவர்களுக்கு பெரிய ஏணி கிடைக்கிறது மற்றவர்களுக்கு அது கிடைப்பதில்லை பார்த்துக்கலாம் என்று ஆதங்கத்துடன் டிவிட் செய்து இருக்கிறார் .இதன் மூலம் நடிகை ஆத்மிகா தற்பொழுது வளர்ந்து வரும் அதிதி சங்கரை குறி வைத்து இந்த ட்விட்டை செய்திருக்கிறார் என்று சர்ச்சை எழுந்துள்ளது

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top