தாம் தூம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். இவர் சினிமாவில் ஃபேஷன் ,மணிகர்ணிகா போன்ற திரைப்படங்களில் எல்லாம் நடித்து பல விருதுகளை பெற்று இருக்கிறார்.
சமீபத்தில் தமிழ் வெளிவந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி என்று திரைப்படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார் .மேலும் தற்பொழுது ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் இவர் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி திரைப்படங்களின் நடித்து வரும் கங்கணா ரனாவத் . இவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் பிற கதாநாயகிகளைப் போலவே இவரும் கவர்ச்சியாக உடைய அணிந்து நடிப்பது வழக்கம் தான் .அப்படிப்பட்ட இவர் தற்பொழுது ட்விட்டரில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
இப்படி கவர்ச்சியாக நடித்து வந்தாலும் கங்கணா இந்து மதத்தின் மீது பெரும ஈடுபாடு கொண்டவர். சினிமாவில் எப்படி நடித்தாலும் கோவிலுக்கு செல்லும் பொழுது பாரம்பரிய உடையான சேலை சுடிதார் போன்ற கண்ணியமான உடைகளை உடுத்தி தான் செல்வார்.
இது போன்ற கொள்கை வைத்து நடந்து கொண்டிருக்கும் கங்கணா ட்விட்டரில் ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் கோவிலில் நிற்பது போன்ற புகைப்படத்தை பார்த்து கொதித்து எழுந்திருக்கிறார்.இதை கண்டித்தும் ட்விட் செய்து இருக்கிறார்.
இவர் ஒரு முறை சர்ச்சுக்கு சென்ற போது ஷார்ட்ஸ் அணிந்து சென்றாராம். அப்பொழுது அந்த சர்ச்சுக்குள்ளேயே அனுமதிக்கவில்லை என்று தன்னுடைய சொந்த அனுபவத்தை கூறி இதுபோன்ற சட்டம் கோவிலுக்குள் வரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆடை நாகரிகம் இன்றி கோவிலுக்குள் செல்லக் கூடாது என்ற சட்டம் வரவேண்டும் என்று தற்பொழுது ட்விட்டரில் ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை கங்கணா ராவ் இதற்கு முன்பும் இவர் இது போன்ற சர்ச்சைகளை twitter-ல் ஏற்படுத்தி வந்ததார்.
இதற்கு முன்பு இருந்த ட்விட்டர் நிறுவனம் இவரை தடை செய்து இருந்தது. ஆனால் தற்பொழுது இப்படிப்பட்ட நிறுவனம் விற்றதில் மீண்டும் இவர் தன்னுடைய கருத்துக்களை பதிவிட தொடங்கி இருக்கிறார்.
இந்தியாவில் இருக்கும் கோவில்களை தரிசிப்பதற்காக எத்தனையோ வெளிநாட்டு பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நம்ம நாட்டுப் பெண்கள் அணியும் ஆடை பாரம்பரியம் தெரியாது.அப்பொழுது அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடை செய்வது சரியான செயலாகவும் இருக்காது. இதனால் கங்கணா ரா கேட்கும் இந்த சட்டம் அமல் படுத்துவது மிகையாகாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.