Monday, November 4, 2024
- Advertisement -
Homeசினிமாஅடப்பாவிங்களா! அதுக்குள்ள பால் ஊத்திட்டீங்களே டா.. குத்து ரம்யா குறித்து வெளியான ஷாக் நியூஸ்

அடப்பாவிங்களா! அதுக்குள்ள பால் ஊத்திட்டீங்களே டா.. குத்து ரம்யா குறித்து வெளியான ஷாக் நியூஸ்

90ஸ் கிட்ஸ் களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை குத்து ரம்யா. குத்து திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர்.கர்நாடகா முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் பேத்தியான நடிகை ரம்யா தன்னுடைய பெயரை திவ்யா என பிறகு மாற்றிக் கொண்டார்.

- Advertisement -

பார்ப்பதற்கு அமுல் பேபி போல் இருக்கும் ரம்யா தன்னுடைய அழகான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் 90 கிட்ஸ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.நடிகர் சூர்யாவுடன் அவர் நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இன்றளவும் அனல் மேலே பனித்துளி என்ற பாடல் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் எப்போதும் இடம் பெற்றிருக்கும். இதேபோன்று தனுஷ் உடன் பொல்லாதவன் படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இந்த நிலையில் திவ்யா தன்னுடைய திரைப்பட வாழ்க்கை முடித்துக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார்.

- Advertisement -

காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் இளம் முகமாக அறியப்பட்ட ரம்யா திடீரென்று இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

தந்தி டிவி,மாலை முரசு போன்ற தொலைக்காட்சிகள் எல்லாம் இந்த செய்தியை பிரேக்கிங் நியூஸ் போட்டனர். இது ரசிகர்களின் மனதையும் சுக்கு நூறாக உடைத்தது. இந்த நிலையில் அவர் நலமுடன் இருக்கிறார் என்ற ஒரு நல்ல செய்தி வெளியானது.

மாரடைப்பால் உயிரிழந்தது வேறொரு நடிகரின் மனைவி என்றும் அவருடைய பெயரும் திவ்யாவின் பெயரும் ஒரே மாதிரி இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது குத்து ரம்யா சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கொண்டாடி வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தன்னுடைய விடுமுறையை முடித்துவிட்டு நாளை திவ்யா இந்தியா வந்து சேர உள்ளார்.

Most Popular