சினிமா

இரண்டாவது திருமணம் எப்போது? நடிகை மீனா சொன்ன பதில்

1982 குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான நடிகை மீனா சிறுவயதிலேயே அவருடைய நடிப்பில் பாராட்டத்தக்க கூறியதாக இருந்தது. அதிலும் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில்  குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். எஜமான், முத்து போன்ற திரைப்படங்களில்  கதாநாயகியாக நடிகை மீனா நடித்தார்.

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் நடிகர் சரத்குமார் , அஜித், பாக்யராஜ், பிரபு முரளி, விஜயகாந்த் சத்யராஜ் அர்ஜுன் போன்ற பல பிரபலங்களுடன் தமிழ் சினிமாவில் கதாநாயகி நடித்து இருந்தார். நடிகை மீனா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் இவர் பிரபலமான நடிகையாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடப்பட்டது.

மேலும் இவர் அம்மன் வேடத்தில் நடிப்பதற்கும் மிகவும் பொருத்தமாக இருந்தார். ஆன்மீகம் தொடர்பான திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்படி சினிமாவுல பெரும் அளவில் புகழ்பெற்று நடித்து வந்த மீனாவிற்கு 46 வயதுகள் ஆகிய தான் தற்பொழுது பெருமளவில் எந்த திரைப்படமும் அமைவதில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மாமன் மகள் என்று கதாபாத்திரத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

Advertisement

மலையாளத்தில் இவர் நடித்த திரிசயம் 2 என்ற திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றது .மேலும் மலையாளத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்த ப்ரோ டாடி என்ற திரைப்படத்திலும் தெலுங்கில் மோகன் பாபு நடித்த  சன் ஆப் இந்தியா என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படங்கள் எதுவும் அந்த அளவிற்கு பிரபலம் அடையவில்லை

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் நுரையீரல் செயல் இழப்பால் உயிரிழந்தார். இது பலரும் அறிந்த விஷயம் தான். இப்படி கணவனை இழந்திருக்கும் மீனாவின் இரண்டாவது திருமணத்தை பற்றி பலரும் பலவிதத்தில் பேசி வருகிறார்கள். இது எல்லாவற்றிற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை மீனா தற்பொழுது ஒரு விஷயத்தை பதிவிட்டிருக்கிறார்.

என்னால் என் கணவன் இறந்ததை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அதிலிருந்து மீண்டு வரவும் முடியவில்லை. இதில் எப்படி நான் என்னுடைய இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிப்பது. என்னுடைய மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதை பற்றி மட்டும்தான் இப்பொழுதெல்லாம் என் சிந்தனை இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement

மீனாவுடைய இந்த துயரத்தை அவர் மறக்க வேண்டும் என்பதற்காக அவருடன் இப்பொழுதும் அவருடைய தோழிகள் உடன் இருக்கிறார்கள். அதனால் அவர் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது போன்ற பல புகைப்படங்கள் சமூகத்தில் வெளி வந்தாலும், இந்த சோகமா வரும் மனதில் நிச்சயம் இருக்கத்தானே செய்யும். அதை உணராமல் இவ்வாறு பேசிய வரை காயப்படுத்துவது நியாயமே இல்லை. இதற்குப் பிறகு ஆவது இதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் நடிகை மீனா இந்த செய்தியை கூறியிருப்பார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top