Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாராஜ்கிரணுக்கு போய் ஜோடியா நடிச்சிட்டனே.. வருதப்பட்ட மீனா! ரஜினி சொன்ன பாடம்

ராஜ்கிரணுக்கு போய் ஜோடியா நடிச்சிட்டனே.. வருதப்பட்ட மீனா! ரஜினி சொன்ன பாடம்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. தனது சிறு வயதில் நடிக்க தொடங்கி 40 ஆண்டுகள் சினிமாவில் கோலூச்சியவர் மீனா. இந்த நிலையில் தனது பல்வேறு படங்கள் குறித்து மீனா அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அப்போது ஹீரோ யார் என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு ராஜ்கிரன் தான் அதில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.

- Advertisement -

ராஜ்கிரனுக்கு போய் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டோமே என மனதளவில் வருத்தப்பட்டு இதுபோல் எஜமான் படத்தில் நடித்த போது எனக்கு மனதளவில் 14 ,15 வயது பெண் போல தான் இருந்தேன்.

- Advertisement -

எனக்கு எந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்ற அனுபவம் எல்லாம் இல்லை. நான் சிறு பெண் என்பதால் ரஜினி எனக்கு என்னிடம் எதுவும் பேச மாட்டார். காட்சியின் நடித்து முடித்த பிறகு தான் ரஜினி இதில் குறை இருக்கிறது .

இதனை எப்படி நடிக்க வேண்டும் என்றால் சொல்லிக் கொடுப்பார். அதன் பிறகு இவ்வளவு கடினமான கதாபாத்திரத்தை நான் புரிந்து நடித்து கொடுத்ததை ரஜினி வெகுவாக பாராட்டினார். இதேபோன்று நாட்டாமை படத்தில் நடிக்க கே எஸ் ரவிக்குமார் என்னை கேட்டார். முதலில் நான் ஒப்புக்கொள்ளவில்லை.

அந்த படத்தில் எனக்கு போதுமான இடமில்லை என்று வேண்டாம் என தவிர்த்து விட்டேன். ஆனால் கேஸ் ரவிக்குமார் என்னை விடவில்லை கண்டிப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

அப்போது அந்தப் படத்திற்காக போடப்பட்ட மீனாப் பெண்ணு மீனா பொண்ணு என்ற பாடலை எனக்கு போட்டு காண்பித்தார். அப்போது எனது பெயரில் பாடலா என்று நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன். இதனால் உடனே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என மீனா கூறியுள்ளார்.

Most Popular