நமது இந்திய கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஒரு முக்கிய அங்கமாக வகிக்கிறது. திருமணம் என்பது ஒரு ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வது உண்டு. நமது நாட்டில் காதல் திருமணம் மற்றும் நமது பெற்றோர்களை நமக்கு துணையை தேர்ந்தெடுக்கும் திருமணம் என அனைத்தும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நவீன கால மாற்றம் காரணமாக தற்போது விவகாரத்தும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கணவன் மனைவிக்குள் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை சகித்து வாழும் தன்மை குறைந்து விட்டது. இதனால் நீதிமன்றங்களில் விவகாரத்து பெறும் வழக்குகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகையும் ஆடை வடிவமைப்பாளருமான ஷாலினி தற்போது விவகாரத்து பெற்று இருக்கிறார். விவகாரத்துக்கு பெற்ற பெண்கள் எல்லாம் தங்களது வாழ்க்கையை தொலைத்தது போல் இல்லாமல் மீண்டெழுந்து இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வெற்றி பெறலாம் என்பதை குறிக்கும் வகையில் ஒரு காரியம் செய்திருக்கிறார்.
அதன்படி திருமணத்திற்கு எவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொண்டாடுவார்களோ, அதேபோல் விவகாரத்த ஆனதையும் போட்டோ சூட் நடத்தி கொண்டாடு இருக்கிறார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ஷாலினி, பெண்கள் விகாரத்தை நினைத்து மனம் தளரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த புது முயற்சி தான் எடுத்ததாக கூறியுள்ளார்.
என்னை பற்றி விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் என்னிடத்தில் இருந்து பார்த்தால் தான் நான் என்ன கஷ்டத்தை அனுபவித்தேன் என்று தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். என்னும் பெண்களை விவகாரத்து செய்யுங்கள் என்று தாம் தூண்டவில்லை என்றும் சகித்துக் கொண்டு வாழத்தான் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.