சசிகுமார் ஜெய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுவாதி.
தன் இயல்பான நடிப்பாலும் பக்கத்து வீட்டு பெண் போன்ற குடும்ப பாங்கான தோற்றமும் கொண்ட ஸ்வாதியை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.
அப்படத்தில் கண்கள் இரண்டால் என்ற பாடலில் நடிகர் ஜெய்யின் தலையை அசைத்து செய்யும் செய்கைக்கும் ஓரக் கண்ணால் சுவாதி பார்க்கும் பார்வைக்கும் மயங்காதவர்களே இல்லை எனலாம்.
அதன் பின் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தது அனைவராலும் பேசப்பட்டது.
அதிலும் ஏன் என்றால் உன் பிறந்தநாள் என்ற பாடல் அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார் நடிகை சுவாதி.
பின்பு 2022 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகிற்கு ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புர்கா அணிந்து கொண்டு ரயில் பயணம் மேற்கொள்வது போன்ற காட்சிகளை பதிவிட்டு தனக்குத்தானே சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்
கண்கள் இரண்டால் என்ற பாடலால் பிரபலமான சுவாதி அந்த கண்கள் இரண்டால் மாட்டிக்கொண்டு உள்ளார். புர்கா அணிந்து கொண்டு கோயில் தரிசனத்திற்கு தான் சென்றதாக அதில் கூறியுள்ளார்.
புர்கா அணிந்து கொண்டு கோயிலுக்கு சென்றது தவறு என்றும், இதில் என்ன தவறு என்று சில பேர் நெட்டிசன்கள் மத்தியில் கடும் வாக்குவாதமாக இந்த சர்ச்சை சென்று கொண்டிருக்கிறது…
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஸ்வாதியோ இன்று மட்டும் நான் நான் புர்கா அணிவதில்லை.
நான் சுதந்திரமாக எப்பொழுது எல்லாம் வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்போது நான் புர்கா அணிந்து கொண்டு சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் புர்கா அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது என் மனம் விரும்பும் வகையில் ஷாப்பிங் செய்தும் எனக்கு பிடித்தமான உணவு வகைகளை தெருவோர கடைகளில் வாங்கி மகிழ்ச்சியாக சாப்பிடுவேன் என்றும் பதில் அளித்துள்ளார்.