Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமா“ படப்பிடிப்பில் துவங்கி இன்று.. ” காதலை உறுதி செய்த தமன்னா.. !

“ படப்பிடிப்பில் துவங்கி இன்று.. ” காதலை உறுதி செய்த தமன்னா.. !

மெழுகு சிலையின் உருவம் என்றால் தமன்னா தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று நடிக்கிறார். அண்மையில் தமன்னாவின் 2.0 சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமாக ட்ரெண்டாகியது. கடந்த ஓர் ஆண்டாகாவே அவ்வப்போது தமன்னா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு வாரத்திற்கு முன் தமன்னாவின் அடுத்த 2 வெப் சீரிசின் டிரெய்லர்களும் வெளியானது. இரண்டிலும் மிக கவர்ச்சியாக ரசிகர்களை சுண்டி இழுக்கும் காட்சிகள். ஜீ கார்டா எனும் ரொமான்டிக் கதையின் சீசன் 1 விரைவில் வெளியாகவிருக்கிறது. அடுத்து மிகவும் பிரபலமான ஹிந்தி வெப் சீரிஸ் ‘ லஸ்ட் ஸ்டோரிஸ் ’ சீசன் 2.

தமன்னாவின் காதலன்

ஜூன் 29ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வரும் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் ம்ருனால் தாக்கூர், தமன்னா, கஜோல் என ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது. இதில் ஓர் கதையில் விஜய் வர்மா – தமன்னா ஜோடி நடித்துள்ளது. திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் கெமிஸ்ட்ரி வேலை செய்துள்ளது. அதை தமன்னாவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

இவர்களது காதல் வதங்திகளாக சில மாதங்களுக்கு முன்பே பரவியது. புத்தாண்டு மாலையில் இருவரும் கட்டி அணைத்து முத்தமிடும் வீடியோ வைரலானது. ஆனால் காதலில் இருப்பதை அன்று அவர்கள் உறுதியும் செய்யவில்லை மறுக்கவும் இல்லை. பிறகு நிகழ்ச்சிகள், ஒன்றாக காரில் பயணிப்பது என பல்வேறு இடங்களில் ஒன்றாக தென்பட்டனர்.

- Advertisement -

இன்று அனைவரும் அறிந்து கொள்வதற்காக அதிகாரபூர்வமாக விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதை கூறினார் தமன்னா. படப்பிடிப்பின் போது தங்களுக்குள் மிகவும் ஒற்றுப்போகி நட்பு காதலாக மாறியது என்றார். மேலும் விஜய் வர்மா தன் மேல் அதிக அக்கறை காட்டி அன்பாக இருப்பது மிகவும் பிடித்துள்ளதாக தமன்னா கூறியுள்ளார்.

Most Popular