சினிமா

கமல் ஹாசன் – மணிரத்னம் படத்தின் கதாநாயகி தேர்வு ! மீண்டும் கமலுடன் இணையும் நடிகை !

Kamal Hassan 234

விக்ரம் படத்தின் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்து ஆண்டவர் என்றால் யார் என்று கோலிவுட்டுக்கு காட்டினார். இந்த தீயை அணையாமல் வைத்திருக்க முன்னது போல தொடர்ந்து திரைப்படங்கள் நடிக்க முடிவு செய்து பல கதைகள் கேட்டார். தகுந்த வட்டாரங்களில் இயக்குனர் ஹெச். வினோத்துடன் தான் அடுத்த படம் என்ற செய்தி பரவிய போது டுவிஸ்ட் வைத்தார் கமல்.

தளபதி வெற்றிக்கூடணி ரஜினி – மணிரத்னம் மீண்டும் இணையப் போவதாக வந்த செய்திகளை பொய்யாக்கி ரஜினியின் இடத்தில் கமல் அமர்ந்தார். மீண்டும் இணைந்து கல்ட் க்ளாசிக்கான தளபதி அல்ல, நாயகன். 35 ஆண்டுகள் கழித்து மணிரத்னமுடன் கைகோர்க்கிறார் கமல்ஹாசன். படத்திற்கு வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Advertisement

கமல் ஹாசனின் 234வது படமாக அமையும் இது அடுத்த ஆண்டு அதாவது 2025ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே கமல் ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. ரெட் ஜெயன்ட் துணையால் 2023இல் நிச்சயம் திரையரங்கிற்கு வந்துவிடும். விக்ரம் படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு கமல் ஹாசனின் 234 படத்தையும் ரெட் ஜெயன்ட் வழங்குகிறது.

கமல் ஹாசன் 234 படத்தின் கதாநாயகி யாரென்று வெளியாகியுள்ளது. கமல் ஹாசனுடன் இதற்கு முன்னர் மன்மதன் அம்பு மற்றும் தூங்காவனம் படங்களில் இணைந்து நடித்த த்ரிஷா இப்படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடுவில் இவரும் பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவி கதாபாத்திரம் மூலம் வந்தியத்தேவன் மட்டுமல்லாமல் அதை பார்க்கும் ரசிகர்களையும் வென்றார்.

Advertisement

மேலும், தளபதி 67 படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதுவும் உண்மையானால் கோலிவுட்டில் சிம்பு, கமல் ஹாசனுக்கு அடுத்து கம்பேக் லிஸ்ட்டில் த்ரிஷாவின் பெயர் பொறிக்கப்படும்.

TOP STORIES

To Top