Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்க்காக அஜித்துக்கு நோ சொன்ன திரிஷா..! முழு விவரம்

விஜய்க்காக அஜித்துக்கு நோ சொன்ன திரிஷா..! முழு விவரம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. அஜித் ,விஜய் என டாப் நட்சத்திரங்களுடன் நடித்த திரிஷா தற்போது மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தது மூலம் திரிஷாவின் மார்க்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் மீண்டும் முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க திரிஷாவை பல இயக்குனர்கள் கேட்டு வருகிறார்கள். அஜித் திரிஷா ஜோடி என்றாலே பார்ப்பதற்கு அம்சமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. இதனால் அஜித்தின் 62 ஆவது படத்திற்கு திரிஷாவை ஜோடியாக ஒப்பந்தம் செய்ய விக்னேஷ்

- Advertisement -

முடிவு எடுத்தார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் படத்திலிருந்து திரிஷா விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய்யின் 67வது படத்தில் நடிக்க திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தளபதி 67 திரைப்படமும் ஜனவரி மாதத்தில் தொடங்குவதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது முடியாத காரியம். இதனால் அஜித்துடன் அதிக படத்தின் நடித்து விட்டதால் விஜய்க்காக தல 62 வாய்ப்பை த்ரிஷா நிராகரித்துள்ளார். மேலும் தல 62 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் சப்ஜெக்ட் என்றும் கூறப்படுகிறது. அதில் தமக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்பதால் திரிஷா இவ்வாறு முடிவு எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் வழக்கம்போல் தல 62 படத்தில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் விக்னேஷ் சிவன் முடிவு எடுத்துள்ளார். தல 62 படம் விரைவாக முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தல 62 படம் முடித்த பிறகு அஜித் ஒன்றரை ஆண்டு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார். பைக் ரைடிங் துப்பாக்கி சூடு என அஜித் கவனம் செலுத்தி விட்டு அதன் பிறகு தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Most Popular