தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக திரிஷா வலம் வருகிறார். பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ள திரிஷா தற்போது மீண்டும் நடிகை பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு நடிகை திரிஷாவுக்கு மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது.
லியோ உள்ளிட்ட பிரபல படங்களில் திரிஷா ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் திரிஷா குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் வருவதுண்டு. நடிகர் திரிஷாவுக்கும் முன்னணி நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் திருமணம் செய்யாமல் பார்ட்டி என்று நடிகர் திரிஷா சுற்றி கொண்டிருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் இணையதளத்தில் சுற்றுவது உண்டு.
இது குறித்து நடிகை திரிஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. சமூக வலைத்தளத்தில் உங்களைப் பற்றி வரும் செய்திகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள். அதை எப்படி கையாளுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை திரிஷா நான் என்னைப் பற்றி இணையதளத்தில் வரும் தவறான செய்திகளை பற்றி கண்டுகொள்ளவே மாட்டேன். என்னை விட நடிகர் விஜய் சமூக வலைத்தளத்தில் பல்வேறு நெகட்டிவிட்டிரகளை சந்தித்து இருக்கிறார்.
ஆனால் அவர் இது குறித்து எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார். அவர் இந்த விவகாரத்தில் அமைதியாக தான் இருப்பார். அவருடைய படங்களும் அவருடைய பணியும் தான் பேசும். இதை தான் நானும் பின்பற்றுகிறேன் என நடிகை திரிஷா கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடிகை திரிஷாவை தங்களது படத்தில் நடிக்க வைக்க தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் போட்டி போடுகிறார்கள். எனினும் நல்ல திரைக்கதையை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க இருப்பதாக திருஷா கூறியிருக்கிறார்.