Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசினிமாதாமதம் செய்த அஜித்.. கடுப்பான திரிஷா.. விடாமுயற்சியிலிருந்து விலகல்

தாமதம் செய்த அஜித்.. கடுப்பான திரிஷா.. விடாமுயற்சியிலிருந்து விலகல்

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது. தன்னுடைய 62 ஆவது திரைப்படத்தை ஆரம்பத்தில் விக்னேஷ்வரன் நடித்த இருந்தது .

- Advertisement -

அஜித் பல காரணங்களினால் விக்னேஷ் சிவன் திரைப்படத்தை விட்டு விலக்கப்பட்டார்.அதனால் தற்பொழுது திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார்.

திரைப்படம் எடுக்கப் போவதாக கூறப்பட்ட நாளிலிருந்து ஏகப்பட்ட மாற்றங்கள் திரைப்படத்திற்கு நிகழ்ந்து வருகிறது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு நல்ல கதை வேண்டும் என்று நடிகர் அஜித் கூறியதால் இயக்குனர் மகிழ்திருமேனி கதையை எழுதுவதற்கு நிறைய நாட்களை எடுத்துக் கொண்டார். கதை எழுதிய பிறகு தல அஜித்தின் தந்தையின் மரணமும் நிகழ்ந்துவிட்டது. அதனால் சில நாட்களும் தாமதமானது.

- Advertisement -

ஒரு வழியாக திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரும் வைத்து விட்டார்கள். இப்பொழுதாவது திரைப்படத்தை இயக்கலாம் என்றால் தல அஜித் தன்னுடைய லட்சியமான உலகைச் சுற்றி பார்க்கும் வேண்டும் என்று பைக்கில் கிளம்பி விட்டார். நேபால் போன்ற இடங்களை சுற்றி விட்டு நடிகர் அஜித் திரைப்படத்தை நடிப்பதற்காக வந்து விட்டார்.

- Advertisement -


முதல் கட்ட படப்பிடிப்பை மே 22ஆம் தேதி தொடங்கலாம் என்று முடிவு ஆனால் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தில் இரண்டாம் கட்ட வருமானவரித்துறை சோதனை நடத்தியது அதனால் அன்று படப்பிடிப்பு தொடங்காமல் போகிவிட்டது.

இப்படி பல தடைகள் இத்திரை திரைப்படத்திற்கு வந்து கொண்டே இருக்கிறது. இந்த சமயத்தில் திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷாவை அணுகியிருந்தார்கள். ஆரம்பத்தில் நடிகை திரிஷாவும் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆனால் தற்பொழுது திரைப்படம் தாமதமாவதை கருத்தில் கொண்டு இயக்குனர் கௌரவ் நாராயணனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை நடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நடிகை திரிஷா ஒப்புக்கொண்டு விட்டாராம்.

இந்தத் திரைப்படம் முற்றிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படம் ஆகும். அதன் காரணத்தினால் நடிகை திரிஷா விடா முயற்சி திரைப்படத்திற்காக காத்திருக்காமல் அடுத்த திரைப்படத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார் என்ற தகவல் தற்பொழுது வந்திருக்கிறது.

மேலும் தற்பொழுது திரிஷா ஒப்புக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

Most Popular