ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலி கான், கிரித்தி சனோன், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். வருகிறது ஜூன் 16ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமா வெளியாகிறது. அதற்கான புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு.
இப்படத்தில் வி.எஃப்.எக்ஸ் எடிட்டிங்க்கு தான் வேலை அதிகம். சென்ற ஆண்டு முதன் முதலில் வெளியான டீசரில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளை சரமாரியாக கலாய்த்தனர். இதனால் வருத்தமடைந்த படக்குழு மீண்டும் எடிட்டிங்கில் வேலை செய்து தற்போது அனைத்து சிக்கல்களையும் சரி செய்துள்ளது.
மீண்டும் எடிட்டிங் செய்ய பயன்படுத்தப்பட்ட கூடுதல் பட்ஜெட்டை ஏற்கனவே முன் வியாபாரத்தில் சம்பாதித்து விட்டதாக படக்குகு தரப்பில் இருந்து செய்திகள் வந்துள்ளது. வெளியீட்டுக்கு 10 தினங்கள் முன்பு அதாவது இன்று ஜூன் 6ஆம் தேதி திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில் வெளியீட்டுக்கு முன் நடத்தப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்படியே திருப்பதியில் தரிசனமும் முடித்தனர்.
தற்போது படக்குழு விசித்திரமான ஓர் செயலை மேற்கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு கொடுத்துள்ளது. இப்படத்தை திரையிடும் அனைத்துக் காட்சிகளிலும் ஓர் இருக்கை அனுமாக்காக ஒதுக்கவுள்ளதாக திட்டமிட்டுள்ளனர். அந்த ஒரு இருக்கை ஹனுமாக்கு மற்ற அனைத்தும் பார்வையாளர்களுக்கு எனக் கூறுகின்றனர்.
எதிர்பார்த்தது போல இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டுள்ளனர். படம் சரியாக வரவில்லை எனில் மொத்த இருக்கையும் அவருக்குத் தான் என சமூக வலைதளங்களில் டிரோல்கள் குவிந்து வருகிறது. சமயம் சிலர் ஆதரித்தும் வருகிறார்கள். ஆதிபுருஷ் திரைப்படமாக 7000 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கதையாம். ராமாயணத்தை தழுவி அதில் நடக்கும் ஓர் கதையை படமாக்கியுள்ளனர். இலங்கைக்கு கடத்திச் செல்லும் மனைவியை காப்பாற்றுவதே கதை என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அனுமான் முக்கிய பங்கு வகிப்பார் எனது அனைவரும் அறிந்த ஒன்றே !