Saturday, November 9, 2024
- Advertisement -
Homeசினிமாபார்வையாளர்களை இழுக்க 150 டிக்கெட் சலுகையை அறிவித்த ஆதிபுருஷ்.. ! தமிழ்நாட்டிற்கு கிடையாது ஏன் தெரியுமா.....

பார்வையாளர்களை இழுக்க 150 டிக்கெட் சலுகையை அறிவித்த ஆதிபுருஷ்.. ! தமிழ்நாட்டிற்கு கிடையாது ஏன் தெரியுமா.. ?

மிகப் பெரிய பட்ஜெட் மற்றும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஆதிபுருஷ். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய 5 மொழிகளில் திரைக்கு வந்துள்ளது. போட்ட பணத்தை எடுப்பதற்காக படக்குழு மிகவும் மல்லுக்கட்டுவதை அவர்களது நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. இப்படம் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலி கான் மற்றும் பலர் நடிப்பில் ஓம் இராவுத் இயக்கத்தில் உருவான இராமாயணக் கதை.

- Advertisement -

சுமார் 150 கோடிகளில் தயாரான இப்படம் இதுவரை 350 கோடிகள் மட்டுமே மீட்டுள்ளது. பட வெளியீட்டுக்கு முன் வட இந்தியாவில் நல்ல எதிர்பார்ப்பு ஆனால் அதில் பாதி கூட தென்னிந்தியாவில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு முதல் நாள் வசூலில் முதலிடம் பிடித்தது. அதன் பின்னர் வண்டியின் வேகம் மெல்ல மெல்ல குறைந்துக் கொண்டே வந்துவிட்டது.

திங்கட்கிழமை 20 கோடிகள் வசூல் செய்ததே கடைசி அதிகபட்சம். அதற்கு மறுதினமே 7.5 கோடிக்கு வந்து பெரிய சரிவைக் கண்டது. பின்னர் படத்தில் கூறப்பட்ட ஏகப்பட்ட குறைகளில் வசனங்கள் மற்றும் சிறிய எடிட்டிங் பணிகளை பார்வையாளர்களின் விருப்பத்திற்கு இணைங்கவும் மாற்றியமைத்துள்ளனர்.

- Advertisement -

ஆதிபுருஷ் 150 ரூபாய் டிக்கெட்

பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருவதால் அவர்களை தியேட்டர்களுக்கு இழுக்க படக்குழு புத்தம்புதிய அறிவிப்புடன் வந்துள்ளது. பி.வி.ஆர், ஐநாக்ஸ் போன்ற அனைத்து வித திரையரங்குகளிலும் ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதிகளுக்கு டிக்கட்டின் விலை 150 ரூபாய் மற்றும் 3டி கட்டணம் மட்டுமே !

- Advertisement -

பார்வையாளர்கள் புதிதாக மாற்றப்பட்ட படத்தை இந்த டிக்கட்டுக்கு கண்டு களிக்கலாம். வட இந்தியாவில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தும் விமர்சனங்களுக்குப் பின் ஆதிபுருஷ் பெரிதாக சறுக்கியது . அதனால் தான் படக்குழு இந்த முடிவிற்கு வந்தது எனினும் இந்த முயற்சி அவர்களுக்கு உதவவில்லை. பாக்ஸ் ஆபிஸில் எந்த வித மாற்றமும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டிற்கு இந்த சலுகை இல்லை

இந்த சலுகை நேற்று மற்றும் இன்று மட்டும் தான். வட இந்தியாவை படக்குழு குறிவைப்பதால் அவர்களுக்கு மட்டுமே இதனை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளா மாநில திரையரங்குகளுக்கு இது பொருந்தாது. ஒரு வேளை இந்த டிக்கெட் விலை தமிழ்நாட்டிற்கும் செல்லும் என அறிவித்திருந்தால் கூட கூட்டம் சேர்ந்திருக்காது என்பது தான் உண்மை.

Most Popular