இந்திய சினிமாவில் தற்போது மதங்களை வைத்து கல்லா கட்டும் முயற்சி படுஜோராக நடைபெற்று வருகிறது. ஆனால் எப்போதும் இது பலன் அளிக்காது என்பதை ஆதிபுருஷ் திரைப்படம் உணர்த்திவிட்டது.
நாட்டிலுள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி இராமாயண கதையை திரைப்படமாக 600 கோடி ரூபாய் செலவில் ஆதி புருஷ் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஓம்ராவத் இயக்கினார்.
இந்த படத்திற்கு கதாநாயகனாக பிரபாஸ், கீர்த்தி சனோன் சாய்ப் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். முதலில் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற நிலையில் அதனை அத்தனையும் உடைத்தது இந்த படத்தின் டீசர். கேலி கிண்டலுக்கு டீசர் உள்ளானதால் மீண்டும் கிராபிக்ஸ் காட்சிகளை மெருகேற்றும் பணி நடைபெற்றது.
இதன் பிறகு படம் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக படத்தை இந்துத்துவா வாதிகள் கழுவி ஊற்றினர்.
குறிப்பாக படத்தின் வசனங்கள் கடவுள்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும் குறிப்பாக அனுமன் லோக்கல் வார்த்தைகளை பயன்படுத்தி பேசும் வகையில் வசனங்கள் அமைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வசனகர்த்தமான மனோஜ் சுக்கலா ஆதிபுரிஸ் திரைப்படத்தால் மக்களின் நம்பிக்கையும் மனமும் பாதிக்கப்பட்டு இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
என்னுடைய சகோதர சகோதரிகள் மூத்தவர்கள் இளையவர்கள் என அனைத்து வயது ராம பக்தர்களிடம் நான் இரு கைகளையும் கூப்பி நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பஜ்ரங்க பல்லி நம் அனைவரையும் ஆசீர்வதித்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தைக் கூட்டி நம் நாட்டின் சனாதனத்தை காக்க பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆதிபுரிஸ் திரைப்படத்தின் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில் மனோஜ் இவ்வாறு மன்னிப்பு கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மதத்தை வைத்து கல்லா கட்டலாம் என நினைத்த திரைப்படத்துறையினருக்கு ஆதிபிருஸ் தக்க தண்டனையை கொடுத்திருக்கிறது.