Tuesday, March 19, 2024
- Advertisement -
Homeசினிமாபடம் ஒத்திவைப்பு ! மீண்டும் ஷூட்டிங் செய்யும் ஆதிபுருஷ் படக்குழு !

படம் ஒத்திவைப்பு ! மீண்டும் ஷூட்டிங் செய்யும் ஆதிபுருஷ் படக்குழு !

ராமாயான கதையைத் தழுவி ஓம் ரவுத் இயக்கும் படத்தின் பிரபாஸ், சைப் அலி கான், கிர்த்தி சனோன் நடித்துள்ளனர். படத்தின் பெயர் ‘ ஆதிபுருஷ் ’ என வைக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க முழுக்க நவீன எடிட்டிங்கில் பிரம்மாண்டமான தயாரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதன் டீசரை படக்குழு வெளியிட்டது.

- Advertisement -

எதிர்பார்த்த எந்த ஒரு நல்ல விமர்சனமும் அவர்களுக்கு கிட்டவில்லை. மாறாக அனைத்து தரப்பு பார்வலையாகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து கொண்டிருந்தனர். படத்தின் வி.எஃப்.எக்ஸ் மெகா சொதப்பல் என்று தெல்ல தெளிவாக தெரிந்தது.

3டியில் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு தரப்பு சமாளித்து. ஆனால் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. பல கோடிகள் முதலீடு செய்து தயாரிக்கும் படம் ரிலீசுக்கு முன்பே இத்தகு விமர்சனங்கள் வாங்குவது நல்லது அல்ல. படத்தை முழுமையாக முடித்துவிட்ட பின் அவர்களே அதை ஒரு முறை காட்சியிட்டு பார்த்தார்கள். படக் குழுவுக்கே அதில் திருப்தியில்லை. விஷூவல் எஃபெக்ட்ஸ் மிகவும் சுமாராக இருந்தது என அவர்கள் கருதியுள்ளனர்.

- Advertisement -

இதன் விளைவாக மீண்டும் அப்படத்தின் சில காட்சிகளை படமாக்கி அதோடு சிறப்பான வி.எஃப்.எக்ஸ் எடிட் செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளனர். இந்த முடிவுக்குப் பின்பே படத்தை ஒத்தி வைக்கவும் திட்டமிட்டனராம். முதலில் பொங்கலுக்கு வெளியிட எண்ணினர்.

- Advertisement -

தற்போது சில வேலைகள் எஞ்சி இருப்பதால் இன்னும் 4/5 மாதங்கள் கழித்து, அதாவது ஏப்ரல் மாதம் இதன் வெளியீட்டை எதிர்பார்க்கலாம். மீண்டும் படப்பிடிப்பில் கூடுதல் நேரம் மற்றும் செலவுகள் இருக்கிறது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து பணிபுரிந்து உலக தரத்திற்கு படத்தை உருவாக்க உள்ளோம். தற்போதைய செலவுகள் எல்லாம் பின்னர் லாபத்தை நிச்சயம் உயர்த்தும் எனப் படக்குழு தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர்.

Most Popular