Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாமாவீரன் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள்.. படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்

மாவீரன் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள்.. படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.சூப்பர் ஹீரோ கதைகளத்தில் பேண்டஸி திரைப்படமாக மாவீரன் உருவாகி வருகிறது. மடோன் அஸ்வின் ஏற்கனவே மண்டேலா திரைப்படம் மூலம் தேசிய விருதுகளை வாங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் லுக் தளபதி படத்தில் வரும் ரஜினிகாந்த் போல் இருப்பதாக நெட்டிஷன்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாவீரன் படம் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. மாவீரன் திரைப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் இணைந்துள்ளார். அதிதி சங்கர் விருமன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடைய தோற்றம் ரசிகர்களை கவரும் வகையில் நடிப்பும் துள்ளலாக இருப்பதாக பட குழு மாவீரன் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

- Advertisement -

மாவீரன் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து படத்தின் மற்ற பணிகள் நடைபெற்று அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை குறி வைத்து மாவீரன் திரைப்படத்தை வெளியிடப்பட குழு முடிவெடுத்துள்ளது .

- Advertisement -

ஏற்கனவே கோடை விடுமுறை மையமாக வைத்து வெளியான டான் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில் மாவீரனின் அதே காலகட்டத்திற்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. சமீபத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வரை வெளியிடவில்லை. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular