Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாபடுத் தோல்வியை தழுவிய அகிலன்..! இவ்வளவு தான் வசூலா?

படுத் தோல்வியை தழுவிய அகிலன்..! இவ்வளவு தான் வசூலா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருபவர்தான் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் படத்தில்  நடித்ததன் மூலம், ஜெயம் ரவி மிகவும் பிரபலம் அடைந்தார். இதனால் அவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

இந்த நிலையில் தான் அகிலன் திரைப்படம் பல தடைகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.இந்த படம் முழுக்க முழுக்க துறைமுகத்தில் நடைபெறும் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் ஜெயம் ரவி முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படம் பெரும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதை மிகவும் மோசமாக அமைந்தால், ரசிகர்கள் இடையே இந்த படம் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அகிலன் திரைப்படம் தமிழகத்தில் வெறும் ஆறு கோடி ரூபாய்க்கு கீழே தான் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதனால் படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டத்தை அகிலன் கொடுத்திருக்கிறது. நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடு கட்டும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதன் பேரில் அகிலன் திரைப்படத்தை முன்கூட்டியே ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அகிலன் வந்ததால் இது ஹிட் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை. கோமாளி படத்தின் முதல் நாள் வசூலை கூட அகிலன் கடக்கவில்லை என்பது தான் மிகவும் சோகமான விஷயம். இதனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மீண்டும் ஜெயம் ரவியின் மார்க்கெட்டை காப்பாற்றும்  என எதிர்பார்த்தாலும் அடுத்ததாக இறைவன் உள்ளிட்ட திரைப்படங்கள் மண்ணை கவ்வ கூடும் என திரைத்துறை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

Most Popular