சினிமா

பிரபல ஓடிடி, டிவி சேனல் அகிலன் உரிமத்தை வாங்கியது.. விவரம் இதோ

தமிழ் சினிமாவில் தற்போது திரையரங்குகளுக்கு கூட்டம் வராமல் பிசினஸ் படுத்துவிட்டது. வாரிசு, துணிவு, வாத்தி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு ரிலீசான எந்த படமும் பெரிய ஹிட் என்ற அந்தஸ்தை பெறவில்லை. கவின் நடித்த டாடா மட்டும் படத்தை வெளியிட்டவர்களுக்கு லாபத்தை கொடுத்தது.

Advertisement

இந்த நிலையில் இந்த போக்கை ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் திரைப்படம் மாற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அகிலன் வரும் மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரீலிஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் தற்போது விற்கப்பட்டிருக்கிறது.

Advertisement

அகிலன் படத்தின் டிரைலர் ரசிகர்களை கவரும் வகையில் இருந்ததால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே போட்டி போட்டு ஓடிடி தலங்கள் அகிலன் உரிமத்தை வாங்கி விட்டார்கள்.  Zee 5 நிறுவனம் அகிலன் திரைப்படத்தை வாங்கி விட்டது.

இதேபோன்று கலைஞர் டிவி தொலைக்காட்சி உரிமத்தை வாங்கி விட்டது. இதன் மூலம் போட்ட பணத்தை எடுத்து விட்டதால் தயாரிப்பாளர் மிகவும் குசியில் இருக்கிறார். பல மாதங்களாக காத்திருந்ததற்கு தற்போது நல்ல பலன் கிடைத்து விட்டதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

எனினும் தமிழ்நாடு உரிமம் 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வசூல் செய்தால் மட்டுமே பணம் ஹிட்டு என்ற அந்தஸ்தை பெறும். அகிலன் திரைப்படத்தை 500 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய பட குழு ஒப்பந்தம் போட்டுள்ளது.

மேலும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் ஜெயம் ரவி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சென்னையில் உள்ள பிரபல கல்லூரிக்கு சென்று ஜெயம் ரவி புரமோஷன் பணியின் ஈடுபட்டு இருந்தார். படத்தின் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன் அதிகாரிகள் கண்ணீர் மண்ணைத் தூவி ஜெயம் ரவி இவ்வாறு சட்ட விரோத நபர்களை கண்டெய்னரில் கடத்துகிறார் என்ற விறுவிறுப்பான காட்சி இடம் பெற்றுள்ளது.இதனால் அகிலன் திரைப்படம் அயன் போல் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top