Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாநான் பெண்ணியவாதி அல்ல.. ஆண்களுக்கு எதிரானவர் அல்ல- ஐஸ்வர்யா ராஜேஷ்

நான் பெண்ணியவாதி அல்ல.. ஆண்களுக்கு எதிரானவர் அல்ல- ஐஸ்வர்யா ராஜேஷ்

2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத்தொடர்ந்து அவர் உயர்திரு 420, சட்டப் படி குற்றம், ரம்மி பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல திரைப்படங்களை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் கனா திரைப்படத்தின் மூலம் தான் ஒரு தனித்துவத்தை பெற்றார். இந்த திரைப்படம் இவரைய முதன்மை கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் ஆகும்.இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா, த கிரேட் இந்தியன் கிச்சன், ஃபர்கானா திரைப்படங்களில் எல்லாம் தொடர்ந்து நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்தத் திரைப்படங்கள் அனைத்துமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். கதைகளையே தேர்வு செய்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்ற கருத்து ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று சத்தியம் திரையரங்கில் பிவிஆர் திரையரங்குகளில் நிறுவனத்தின் தெற்கு மண்டல தலைவரான மீனா சுப்ரியாவின் அன் ஸ்டாப்பபில் என்ற புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் சினேகா நாயர் மைக் செட் ஸ்ரீராம் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் இதைக் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் நான் ஒன்றும் பெண்ணியவாதி அல்ல. பெண்களைப் பற்றிய திரைப்படங்களை ஆக தேர்வு செய்து நடிப்பதால் நான் ஆண்களுக்கு எதிரானவளும் அல்ல.

நான் சினிமாவில் அறிமுகம் ஆகும் பொழுது எல்லாவிதமான கதாபாத்திரத்தையும் உங்களால் நடிக்க முடியாது.இப்படிப்பட்ட சினிமாவை ஏன் தேர்வு செய்கிறீர்கள் என்று எல்லாரும் என்னை பார்த்து கேட்டார்கள் என்றும் வேதனையுடன் கூறி இருந்தார். நான் எனக்கு ஆண்களை பிடிக்காது.என்றெல்லாம் கிடையாது என்று மனம் திறந்து பதில் அளித்து இருந்தால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் , என்னுடைய சகோதரர் மணிகண்டன் கடந்த பிக் பாஸ் 6 கண்டஸ்டன்ட் ஆவார். அதில் அவர்களுடைய சொந்த வாழ்வை பற்றி பேசும் பொழுது தன் தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷ் என் தாய் மற்றும் நான் நாங்கள் மூவரும் நிறைய சிரமப்பட்டு இருக்கிறோம்.

அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆடிஷனுக்காக ஒருவரிடம் ஆக சென்று வருவார் என்றெல்லாம் அவர்களின் வாழ்வில் பட்ட கஷ்டத்தை பற்றி கூறியிருந்தார் .இவற்றை வைத்து பார்க்கும் பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு வரும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவ்வாறான படங்களை நடித்து பெறுகிறார் என்று தோன்றுகிறது .

தற்பொழுது இவர் நடித்த தீரா காதல் என்ற திரைப்படமும் வெளிவந்தும் சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular